முக்கிய செய்தி

கொழும்பை சேர்ந்த 6 பேர் கொண்ட எமது நண்பர் குழு ஒன்று பேரதனியாவில் உள்ள எமது நண்பர்களின் அழைப்பை அடுத்து 26.10.2007 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் தொடரூந்து மூலம் தமது பயணத்தை ஆரம்பித்தார்கள். அதற்கு முன் எமது நிருபர் இவர்களை சந்தித்து அவர்கள் பயணத்தைபற்றிய கருத்துகளை கேட்டறிந்தார்.அவர்கள் அனைவரும் தமது பயணத்தை பற்றிஎமது நிருபருக்கு அளித்த கருத்துகள் கீழே...

நிருபர்(விஐித்) :- "வணக்கம் பிரகாஷ் உங்கள் பயணத்தின் நோக்கம்
என்ன?"

பிரகாஷ் :- "டேய்..." (தனக்குரிய பாணியில் சொல்கிறார்) "பல்லன் கனகாலம் வா வா என்டான் அதுதான் வெளிக்கிட்டனான். அதுமட்டும் இல்ல
எனக்கும் சஞ்யேக்கும் ஒரு போட்டி இருக்கு! அதுதான் பல்லன்ட
காசில ஒரு கை பாப்பம் என்று வெளிக்கிட்டன். OK....... "

நிருபர்(விஐித்) :- "வணக்கம் சஞ்யே உங்கள் பயணத்தை பற்றி
சொல்லுங்க?"

சஞ்யே :- "என்னைப் பொருத்தமட்டில இது ஒரு புலனாய்வுப் பயணம்
என்றும் சொல்லலாம் ஏனெனில் எனக்கு ஒரு சந்தேகம் அப்ப
இருந்து இரண்டாயிரத்தி மூன்று புளக்கரில ரூபன் என்ற பேரில
எழுதிறது பத்தை இல்ல என்று அதுதான் போய் எனக்கு
முன்னால ஒரு பின்னூட்டமாவது போட சொல்லி பாக்கணும்."

நிருபர்(விஐித்) :- "வணக்கம் சுகிந்தன் நீங்கள் ஏன் போகிறிங்க?"

சுகிந்தன் :- "நான் எனது இலட்சியத்தை நிறைவேற்றுவம் என்று. என்ன
இலட்சியம் என்றால் எல்லா இடத்திலையும் ஓம்லட் போட்டிடன்
கண்டில போடணும் என்ற நெடுநாள் ஆசை இதன் மூலம்
நிறைவேற போகுது அதுதான் வெளிக்கிட்டன்"

நிருபர்(விஐித்) :- "உங்கள் இலட்சியம் நிறைவேற எமது வாழ்த்துக்கள்"

நிருபர்(விஐித்) :- "வணக்கம் கமல் நீங்கள் ஏன் போகிறிங்க?"

கமல் :- "நான் முதல் யோசித்தன் இதுல போறது வேற பெடியல் நான்
எப்படி போறது என்று பேந்து பார்த்தா வெளிப் பொடியலான
ரவி,சுகிந்தன்,டினோயன் வந்த படியால் வெளிக்கிட்டன்"

நிருபர்(விஐித்) :- "வணக்கம் ரவி நீங்கள்?"

ரவி :- "உங்களுக்கு தெரியும் தானே நான் இப்ப குடும்பகாரன். இருந்தாலும்
பெடியல் கூப்பிட்டாங்களே என்ன செய்வது வெளிக்கிட்டிட்டன்"

நிருபர்(விஐித்) :- "நல்லது உங்கள் பயணம் நன்றாக அமைய எமது
வாழ்த்துக்கள்"பிந்திய செய்தி :- நேற்றிரவு நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் பல நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.இது பற்றிய படத்தொகுதி இவர்கள் வந்ததும் வெளியிடப்படும்.

2 பின்னூட்டங்கள்:

பிரசாத் said...

எங்கட நிரூபர் விஜித்தும் போய் இருக்கிறாரா? .......
போயிருந்தல் பேராதனையில் கொக்ககோலா மாத்திரமா குடிப்பார்......???

பகீ said...

கெதியில படங்களையும் போடுங்கோப்பா....

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com