குரங்கின் கையில் பூமாலை





நம்ம ரூபன் அவர்களின் கையில் webcam ஒன்னு அகப்பட்டு அது பாடாதபாடுபடுவதாக நமது 
jhc 2003 இன் கண்டி செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்தகவலை உறுதிப்படுத்தும்படியாக அமைந்த 
ரூபனின் புகைப்படங்கள் சில உங்களின் பார்வைக்கு விடப்படுகின்றது.

காதலர்தின நல்வாழ்த்துக்கள்


நமது நண்பர்கள் அனைவருக்கும் முக்கியமாக காதலர்கள் அனைவருக்கும் jhc2003 சார்பாக இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.


காதல் இல்லாமல் நாம் வாழ்வதும் வாழ்வா.............!

காதல் இல்லாமல் நாம் சாவதும் சாவா.......................!

காதல் பண்ணுங்கள், இன்பமாக வாழுங்கள்.................!

குப்புசாமியின் நம்பமுடியாத சாதனைகள்.......பாகம் 1


நமது நண்பர்களின் சாதனைகளைப் பற்றி சொல்லுவும் என்று வெளிக்கிடும்போது முதன்முதலில் நினைவுக்கு வருவது நமது இடைக்காடு பெற்ற தவப்புதல்வன் சுகந்தமாறனின் சாதனைகள் தான். ஏன் என்றால் சாதனைகள் செய்வதில் அவனுக்கு நிகர் அவனேதான்.அவனின் சில சாதனைகளை பட்டியல் போட்டு உங்களின் நினைவினை ஒருகணம் பழைய பள்ளிபருவத்திற்கு அழைத்துச்செல்லலாம் என்று நினைக்கின்றேன்.


1. ஈக்கு வாணம் விட்டு கை உடைந்தது


நான் நினைகின்றேன் அது ஒரு பள்ளி சாதாரண தர பரீட்சை நெருங்கும் காலம், அப்போது நானும் பாலனும் குப்புசாமியும்(சுகந்தமாறன்) combined study என்று எங்க வீட்டில் அரட்டை அடித்த நேரம். சரியாக கிறிஸ்மஸ்க்கு இரண்டு நாட்கள் முந்தி இப்படியாக நாங்கள் மூன்றுபேரும் படித்துக்கொண்டு இருக்கிறப்போ பாலன் நான் வாங்கி வைத்த ஈக்குவாணத்தை கண்டுட்டான், அது கிறிஸ்மஸ்க்காக வாங்கினது.அதைப்பார்த்த பாலனுக்கு இருப்பு கொள்ளவில்லை.அதைவைத்து ஏதாவது செய்யணும் என்று துடித்தபோது எந்த விசயத்தையும் பிளான் பண்ணி செய்வதில் வல்ல நமது குப்புசாமியின் மூளையில் ஒரு பொறி தட்டியது.அந்த ஈக்குவாணத்தை நம்ம தயிர் ( உமைகரன்) வீட்டுக்கு மேல கொண்டுபோய் விடணும் என்னு சொன்னான். சரியாக நடுஇரவு 12 மணிக்கு பாலனும் குப்பனும் ஏதோ பெரிய தாக்குதலுக்கு போற கெட்-டப் உடன் ஈக்குவாணத்தை எடுத்துக்கொண்டு எங்க வீட்டு படலையினையும் ஏறித்தாண்டி வெளியில் போய்ட்டாங்க. நானும் இவர்களை விட்டுட்டு வீட்டில் இருந்தேன். திடிரென எனது வீட்டுக்கு மேல ஈக்குவாணம் செல்லும் ஒளி தெரிந்தது. இந்த இரண்டு கழுதைகளும் என்னிடமே ஈக்குவாணம் வாங்கு அதை என் வீட்டிலயே விட்டு என்னை முட்டாள் ஆக்கிட்டாங்க. சற்று நேரத்தில் குப்பனும் பாலனும் வந்தார்கள்.அப்போ குப்பன் கையை பிடிச்சுக்கொண்டு வந்தான், என்ன என்று கேட்டபோது ஈக்குவாணம் விட்ட விசையில் கை மூட்டு கழண்டுபோட்டுதாம். நாங்க எல்லாரும் சிரித்த போது அவன் சொன்னான், டேய் முட்டாள் பசங்களா நீங்கள் நீயுட்டனின் 3ம் விதி படிச்சது இல்லையா, போய் படிச்சிட்டு வாங்க பிறகு நம்புவீர்கள் என்றான், இப்பகூட நீங்கள் கேட்டாலும் இதையே சொல்லுவான். இந்த உலகத்திலே ஈக்குவாணம் விட்டு கை கழண்ட ஒரே ஒருத்தன் நம்ம குப்புசாமி தான்.


2. கத்தி வீச்சு


கிறிஸ்மஸ் காலங்களில் நமது நண்பர்கள் கைகளில் பட்டாசுகளுக்கு குறைவிருக்காது. அந்த பட்டாசுகளை நமது நண்பர்களின் வீடுகளில் எறிந்துவிட்டு ஓடிமறைவதில் ஒரு இன்பம்.இதில் நமது குப்பன் தான் வல்லவன்.( குப்பனும் பாலனும் தோசைவீட்டில் மூலை வெடி எறிந்து தோசையின் அப்பா கலைக்ககலைக்க ஓடித்தப்பிய அனுபவவும் குப்பனிடம் உண்டு ).ஆனால் இயமனுக்கே இடியப்பம் தீத்தினது போல குப்பனின் வீட்டுக்கே நமது நண்பர்களினால் பட்டாசு வீசப்பட்டுவிட்டது. இது இப்பிடியாக இருக்க ஒருநாள் குப்பனின் வீட்டில் மூலைவெடி போடுவது என்று தீர்மானித்து நமது நண்பர் பட்டாளம் ஆயத்தமான போது இதை சிலர் மூலம் குப்பனின் காது அறிந்துவிட்டது. இதை அறிந்த குப்பு 3 மேசைக்கத்தி, 1 மீன்வெட்டும் அறிவாள், 1 அன்ரனா பைப் என்பவற்றை தயார்நிலையில் வைத்துக்கொண்டு மாலை 6 மணி முதல் சாப்பிடாமலும் தண்ணீர்கூட அருந்தாமலும் தனது வீட்டு படலை அருகே மறைந்திருந்தான். ஆனால் நண்பர்கள் அவ்விடம் போனதோ இரவு 10 மணியளவில். அவ்வளவு நேரமும் வீட்டார் சொல்லையும் பொருட்படுத்தாமலும் உணவினை கூட கவனிக்காமலும் தனது பிளானை சரியாக செய்வதில் விழிப்போடிருந்தான் நமது குப்பன். இது தெரியாமல் நமது நண்பர்கள் போய் அவன் வீட்டில் வெடி போட்டதும் ( வெடி போடும் வரை பார்த்துக்கொண்டு இருந்தான்) 3 மேசைக்கத்திகளினால் நண்பர்களை குறி பார்த்து எறிய வெளிக்கிட்டான் குப்பன். நண்பர்கள் உயிர் தப்பினா போதும் என்று ஒரே ஓட்டம். அதில் மயிரிழையில் ஓடித்தப்பினவர் தான் நமது நண்பன் ரொட்டி. இப்பிடியாக கத்து எறிவதிலும் வல்லவன் குப்பன்.



குப்பனுடைய இன்னும் பல சாதனைகளுடனும் நமது ஏனைய நண்பர்களினதும் சாதனைகளுடனும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.

முகப் புத்தகமும், முகத்தை மறைப்பவர்களும் !

வணக்கம்

நீண்டகால இடைவெளிக்கு பிறகு, அனைவரையும் சந்திப்பதையிட்டு மகிழ்வடைகிறேன். மலரும் நினைவுகள் நீண்டநாட்களாக மலராமல் வெறிச்சோடி இருப்பது வேதனையளிப்பதுடன் இதனை .com ஆக்கி மேலும் பல விடயங்களை இதனுடன் இணைக்கும் முயற்சி இனி வெற்றியளிக்குமா என்பது சந்தேகமே.

முகப்புத்தகத்தின்(Facebook) ஆதிக்கம் நம்மவர்களிடையே வலுப்பெற்றதை தொடர்ந்து, மலரும் நினைவுகள் வலுவிழந்து போனது காலத்தின் குற்றமா அல்லது நம்மவர் குற்றமா என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும் இப் பதிவு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நண்பர்களை இணைப்பதும் கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதுமே எனும் பட்சத்தில், அந் நோக்கம் Facebook இல் நிறைவேறுவதனால், இப்பதிவு கவனிப்பாரற்று போவதையிட்டு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எனவே நம்மிடையான உறவுகளைப் பேண Facebook மட்டுமே போதும் என நினைக்கிறேன்.

நண்பர்களை இணைப்பதும் தேவைப்படு்ம் போது விலக்குவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதற்கான அதிகாரம் Facebook இல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலரும் நினைவுகளில் இத்தகைய வசதி இல்லை. அனைவரும் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம். ஏனெனில் இது கல்லூரி காலத்தை கால முழுமைக்கும் கொண்டிழுக்கும் முயற்சி. கல்லூரியில் கூட, விரும்பியோ விரும்பாமலோ எதிர்மறை கருத்துக் கொண்டவர்களெல்லாம் ஒரே வகுப்பறையில் இருந்து கற்கவேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே இப்பதிவிலும் அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டிய கடப்பாடு ஒன்று உள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இணைப்புகளுக்கும் விலக்கல்களுக்கும் சிறந்த இடம் Facebook என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். Facebook வாழ்க.

கல்லூரியில் நாம் எத்தனையோ கொட்டங்கள் அடித்திருக்கிறோம். ஆனாலும் எம்மை அறியாமல் எம்மமை நாமே மெருகூட்டியும் இருக்கிறோம். அந்தவகையில் நான் பல புத்திஐீவிகளை இனங்கண்டிருக்கிறேன். அவ்வாறு இனங்காணப்பட்ட ஒரு நண்பனை எவ்வாறு இனங்கண்டு கொண்டேன் என உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

காலை 8.30 க்கு குமாரசாமி மண்டபத்தில் தவறாமல் இடம்பெறும் ஒன்றுகூடலில் கலந்துகொள்வதை எவ்வாறு தவிர்க்கலாம் என எண்ணுபவர்களில் நானும் ஒருவன். இருப்பினும் கலந்துகொண்ட சில ஒன்றுகூடல்களில் சில எனக்கு பயனுள்ளவையாக இருந்தன. அவற்றில் குறிப்பாக சில உரைகள் அடங்கும். நிச்சயமாக மக்கருடையது அல்ல, ஒரு நண்பனுடையது.

2001.09.12 அதாவது அமரிக்க உலகவர்த்தகமைய தாக்குதல் உதயனில் வெளியாகிருந்த அன்று காலை, பத்திரிகை கண்ணோட்டம் முடிந்ததும், திடீரென மேடையில் தோன்றினான். என்னதான் அமிரிக்காவின் தன்னாதிக்க போக்கு மற்றைய நாடுகளால் எதிர்க்கப்பட்டாலும் அதற்கு பயங்கரவாதம் பதிலடியாகாது என்பதையும், தேவையற்ற உயிப்பலிகள் அவசியமற்றது என்பதையும் மிக ஆணித்தரமாக எடுத்துரைத்தான். பேசிமுடிந்ததும் ரவீந்திரநாதன் ஆசிரியர் அவனைப் பாராட்டியதுடன் இது உண்மையிலே இங்கு பேசியிருக்க வேண்டிய பேச்சல்ல. ஐ.நா வில் பேசியிருக்க வேண்டிய பேச்சு என புகழாரம் சூட்டியிருந்தார்.

முதற்தடைவையாக ஓர் முற்போக்கு சிந்தனையாளனாக என்மனதில் அவன் உள்வாங்கப்பட்டான்.

சில காலங்களின் பின் அதே பத்திரிகை கண்ணோட்டத்தில் குடாநாட்டில் குறிப்பிடப்பட்ட ஓர் ஊரில் வேள்விக்காக பல ஆடுகள் வெட்டப்பட்டதாக செய்தி வாசிக்கப்பட்டது. அன்றும் திடீரென தோன்றினான். மதத்தின் பெயரால் வாழ்ந்து கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை வெகுவாக சாடியதுடன், அவை நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தான்.

எனது கருத்துடன் ஒத்துப்போனதாலோ, அல்லது ஒரு அந்தணனாக இருந்தும் தனது மதத்திலுள்ள தவறுகளை சுட்டிக்காட்ட தயங்காத பகுத்தறிவினாலோ, அவன்மீதான மரியாதை மேலும் அதிகரித்தது.

பின்னொருதடவை, சிரற்ற காலநிலையாலோ அல்லது கர்த்தால் காரணமாகவோ கல்லூரி வழமையற்று காணப்பட்ட நாளொன்றில், நாமெல்லாம் வீடு செல்ல ஆயத்தமாகி வெளியேறுகின்ற வேளையில் கல்லூரி நிர்வாகம் தடைபோட்டது. 2.40க்குத்தான் வெளியேறலாம் என கூறியது. நாமெல்லோரும் பாதிதூரம் கொண்டுவந்த சைக்கிள்களை அப்படியே நிறுத்திவிட்டு, இல்லலை நாங்கள் வெளியேறப் போகிறோம் என கலாட்டாவில் ஈடுபட்டோம். மறுநாள் கலை ஒன்றுகூடலில் இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி , நாம் நடந்துகொண்ட விதம் தவறு என எடுத்துரைத்தான்.

சக நண்பர்களாக இருந்தாலும் தவறு எனின் சுட்டிக்காட்டும் பொறுப்புள்ள தன்மையால் மேலும் அவனை நான் புரிந்துகொண்டேன்.

இறுதியாக வருடாந்த ஒன்றுகூடலுக்கான திகதியை தீர்மானிப்பதில் பல சிக்கல்கள் எழுந்தபோது, உயா்தர மாணவர் ஒன்றிய பொது குழுவுக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையில் ஓர் சந்திப்பு இடம்பெற்றது. இதில் ஓங்காரமுர்த்தி பேசுகையில் தான் அனைத்து ஏற்பாடுகளையும் கவனிப்பதாகவும் எம்மை ஒன்றுகூடல் தினத்தன்று மட்டும் வந்து கலந்துகொண்டால் போதுமானது எனவும், இதனால் பரீட்சையை அண்மித்ததாக திகதி தீாமானிக்கப்பட்டாலும்ஈ ஒன்றுகூடலை நடாத்தலாம் என கூறினார்.
இவ்வேளையில் உரையாற்ற வந்த அவன், பல பாடசாலை மாணவர்களும் கலந்து கொள்ளும் இந்துக்கல்லூரியின் ஒன்றுகூடல் ,இந்துக்கல்லூரியின் விழுமியங்களுடன் நடக்கவேண்டுமாயின் அதை இந்துவின் மாணவர்களே நடாத்த வேண்டும் அன்றி ஆசிரியர் அல்ல எனவும் அவ்வாறு மாணவர்கள் சேர்ந்து நடாத்தும் போதுதான் ஒன்றுகூடல் எனும் சொல்லு அர்த்தப்படும் எனவும் உரையாற்றினான்.

தானும் நிர்வாகத்தில் ஓர் அங்கமாக இருந்துகொண்டு, நிர்வாக்த்துக்கெதிராக நியாயத்ததை எடுத்துரைத்த போதும் அவன் உயர்ந்துநின்றான்.

இவ்வாறன வகைகளில் ஏனது மனதில் ஆழமாக பதிந்து பொயிருந்த அந்த நண்பன் Facebook இலும் எனது நண்பனாக இருந்தான். ஆனால் இன்று இல்லை. அவனாகவே வில(க்)கி கொண்டான்.

காரணம் சிங்ககொடியை தன்னுடலில் போர்த்தி அவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தக்கு நான் ஓர் comment போட்டிருந்தேன், "I didn't expect this from u" என.

இலங்கையிலிருக்கும் எந்த தமிழனும் தனது இனப்பற்றை வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாது என்ற உண்மையை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

Cricket வேறு அரசியல் வேறு எனும் கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எமது இன அழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில், Cricket எவ்வளவுதூராம் முக்கியமானது என்பது அந்ந நண்பனைப் பொறுத்ததது என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இலங்கைமீதும், அதன் தேசியக்கொடி மீதும் நண்பனுக்கு இருக்கும் விசுவாசத்தை நான் கொச்சைப்படுத்த முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்கிறென்.

ஆக, இவ்வளவையும் ஏற்றுக்கொண்டும் அத்தகைய ஓர் comment ஐப் போட்டது எனது முட்டாள்த்தனம்.

என்மனதில் முற்பொக்கு சிந்தனையாளனாக உள்வாங்கப்பட்டவன், இனப்பற்று கொண்டவனாகவும் இருப்பான் என எதிர்பார்ர்ததும் எனது முட்டாள்த்தனம்.

இனப்பற்று இருக்கும், ஆனால் அதை வெளிப்படுத்த முடியாத சூழலில் வாழ்கிறான் என எதிர்பார்த்ததும் என் முட்டாள்த்தனம்.

என்னைப் போன்று மற்றவர்களும் இருக்கவேண்டும் என எதிர்பார்த்ததுவும் என் முட்டாள்த்தனம்.

இலங்கை கொடியை போர்த்தியதன் மூலம் அவனது இனப்பற்று எந்ந வகையில் குறைந்து போய்விட்டது எனும் கேள்வி நியாயமானதே .

அவனுக்கு இனப்பற்று இல்லையென நீ எவ்வாறு கூறவாய் எனும் கேள்வியும் நியாயமாதே.

நான் வெளிக்கொணர முற்படுவது நண்பனின் இன உணர்வு பற்றியல்ல.

அவனது Facebook இல் சிங்கள நண்பர்கள் இருக்கலாம். எனது comment இனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கலாம். உண்மைதான். ஆனால் இதற்கு தீர்வாக அவன் சம்பந்தப்பட்ட comment ஐ அழித்திருக்லாம். அல்லது புகைப்படத்தை நீக்கியிருக்கலாம். நான் புரிந்து கொண்டிருப்பேன். அதை விடுத்து என்னை ஏன் நண்பர்கள் பட்டியலிலிருந்து நிக்கினான் என்பதுதான் புரியவில்லை.

சரி அவன் நீக்கினால் நீக்கட்டும் என உனது வேலையைப் பார்ப்பதை விடுத்து ஏன் இப்படி எழுதி நேரத்தை வீணடிக்கிறாய் என மற்றவர்கள் கெட்பதும் நியாயாமாதே.

தன்னை எவ்வகையில உள்வாங்கி வைத்திருந்த ஓர் நண்பனை நீக்கியிருக்கிறோம் என அவனுக்கு புரியவைக்கும் நோக்கமாக இருக்கலாம். இல்லையா?

சரி அப்படி புரியவைப்பதாயின் அவனுக்கு தனிப்பட்ட முறையில் எழுதி புரியவைத்திருக்கலாமே எனும் கேள்வியும் நியாயமானதே.

இந்ந சாட்டிலயாவது JHC2003 இல எழுதுவம் எனும் நோக்கமாக இருக்கலாம், அல்லது எந்த சிறிய விடயத்தையும் பெரிதுபடுத்தி ஆரையாவது வம்புக்கு இழுக்கும் எனது நாய்க்குணமாகவும் இருக்கலாம். இல்லையா?

வருகிறேன்.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com