புனிதமான காதலர் தின நல்வாழ்த்துக்கள்


என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும் எங்களின் jhc 2003 சார்பாகவும் காதலர்தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன், விசேடமாக ரவி,G.P,சஞ்ஜெ,பிரகாஸ்,விஜித்,சீனி,மாயா,ரூபன் (????),தோசை,வெட்டி உமா அவர்களுக்கு என் வாழ்த்துகள் உரித்தாகட்டும்,யாரையும் இதில் குறிப்பிடாமல் மறந்துபோய் இருந்தால் அவர்களை இதில் இணைத்துகொள்ளவும்.


கமலிடம் காதல் என்றால் என்ன என்று கேட்டதுக்கு அவன் ஒரு விளக்கம் சொன்னான்,காதல் என்றால்

கா- காத்து இருந்து

த - தவித்து இருந்து

ல் - (இ) ல்லாமல் போவது

I love you சொல்ல பயப்படும் நம் நண்பர்கள் சில பேருக்காக சில டிப்ஸ். அடுத்தமுறை அவர்களும் விசேட வாழ்த்தை பெற ஆசிகள்.

சொல்லும் காதல் தான் செல்லும். சொல்லாத காதல் செல்லாது. சொல்ல பயமாக இருக்கிறதா? அப்படியென்றால் இதில் எது உங்களுக்கு சரியெனத் தோன்றுகிறதோ அதை செய்யலாம்.

நீங்கள் விரும்பும் நபரை வெளியே அழைத்துச் சென்று, ஐ லவ் யூ என்று எழுதும்படி ஆர்டர் செய்து கேக் வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்.

ரேடியோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு போன் செய்து நீங்கள் காதலிப்பதை உணர்த்தலாமே?

உங்களது அல்லது உங்களுக்கு பிடித்தமானவரின் நண்பரிடம் பூ கொடுத்து அனுப்பலாம்.

உங்களது காதலை வாய்ஸ் மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பலாம்.

அவரின் கையில் கிடைக்கும்படி காதல் கடிதம் கொடுக்கலாம்.

வாழ்த்து அட்டை அல்லது கடிதத்தை தபால் மூலம் அனுப்பலாம்.

அவருடன் எங்கேனும் செல்லும்போது, காற்றில் எழுதும் பேனாவின் மூலம் எழுதிக் காட்டலாம்.

அவர்களைப் பற்றி கவிதை எழுதிக் கொடுக்கலாம்.

உங்களுக்கென தனி இணையதள முகவரியை தயார் செய்து அதன் மூலம் அவருக்கு உங்களது காதலை சொல்லலாம்.

ரொம்ப வித்தியாசமாக இருக்க வேண்டுமானால் உள்ளூர் நாளிதழில் அவருக்கு மட்டுமே புரியும் வகையில் விளம்பரம் கொடுக்கலாம்.

அவரது கணினியில் காதல் சின்னத்தை ஸ்கிரீன் சேவராக சேவ் செய்து வைத்துவிடுங்கள்.

இனிப்பு அடங்கிய பெட்டியில் காதலை சொல்லும் வாழ்த்து அட்டையை கொரியரில் அனுப்புங்கள்.

அவரது புகைப்படத்தைக் கொடுத்து ஓவியமாக வரைந்து வாங்கி அதை அவருக்கு அனுப்புங்கள்.

நீங்கள் எப்போதும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில் இதயத்தை வரைந்து அதில் உங்களது பெயரை செதுக்கி வையுங்கள்.

அவருக்குத் தேவையான, முக்கியமானதொருப் பொருளை வாங்கி பரிசாக அளித்து அவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களது காதலை உரையுங்கள்.

காதல் பாடல்களை ஒன்றாக சி.டியில் தொகுத்து பரிசாக அளிக்கலாம்.

காதல் அட்டையை மின்னஞ்சலில் அனுப்பலாம்.

.வெற்றி நிச்சயம்..... வாழ்த்துக்கள்

பி.கு :கமல் இதில் எல்லாத்தையுமாவது செய்து ஒரு முடிவுக்கு வா...

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com