அட இது நம்ம பெடியளின்ட சாதனை...

வணக்கம். என் அருமை தோழர்களே என்னடா இவனும் எழுத வந்திட்டான் எண்டு யோசிக்காதேங்கோ. எல்லாரும் எழுதும்போது நானும் எழுத வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. சரி எதை பற்றி எழுதுவம் என்று யோசிக்கும் போது. நம்மட பெடியளின்ட சாதனை பற்றி எழுதலாம் எண்டு யோசிக்கிறன். எங்கட பெடியளில முதல் யாரு கலியாணம். கட்டினது (சட்டபூர்வமாக, சட்டபூர்வம் இல்லாம). யாரு பெட்டைகளிட்ட கூட வழிந்தது. யாரு முதல்ல அடிவாங்கினது.யாரு முதல்ல இயக்குநர் ஆனது. இப்படி பலதும் அராய இருக்கிறன். நீங்களும் எனக்கு அதரவுதரவேண்டும்.

சாதனைகள் தொடரும்...
பகுதி 2

அது சரி நம்ம திலீபன் சொன்ன மாதிரி உள்ளே போட்டு படுத்து கிடந்து யோசிக்கும் போது முதல்ல வந்தது நம்ம குப்பு சாமி தான் அதாவது முதல்ல அவருடைய சாதனை தான் வந்தது. மொரட்டுவவில் பொறியியல் படிக்கும்(தோட்டம் கொத்தினாலும் பொறியியலாலன் என்ற பட்டதோடதான் கொத்துவன் என்று சொல்லிக்கொண்டு படிக்கிறார்) அவர் செய்த சாதனை முதல்ல ஒரு குறும்படம் இயக்கியது.

""பில்லா2007""
(இது தான் அவரோட குறும் படம். அடுத்த ஷங்கர் என்று? நம்ம பெடியளாலே புகழப்பட்டவர் நிஜம் தாங்கோ)...

முல்லைதீவில் விஷ்கி போத்தல் பொறிக்கிபோட்டு நம்ம த....ரிடம் நல்லபெயர் பெற்றவர்.. இவரை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால்.. நல்லா குறி தவறாமல் கத்தி விசுவார். நம்ம தோசையை கேட்டால் தெரியும்....அதோட நல்லா வெடியும் போடுவார் அதை பற்றி தோசையின்ற அப்பாவிடம் கேட்டால் தெரியும்... . ( நன்றி உமைகரன்,,,,
பகுதி 3


சரி அடுத்து மங்களகரமாக இருக்கட்டுமே வேற ஓன்றும் இல்லை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் திருமணம் தான்(நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை_) சரி விடயத்துக்கு வருவோம்..... நம்ம பெடியல்களிலே முதல் சட்டபூர்வமக திருமணம் முடித்து (2007)சாதனை.(........?) புரிந்தது நம்ம "முட்டை" அஜித்குமார் தான்....எல்லரும் கதலிலை தான் விழுவினம் ஆனால் நம்ம அஜித் கதலுக்ககாக காலிலை எல்லாம் விழுந்து சாதனை புரிந்தவர்....(.......!) இவருடைய சாதனைகளை பற்றி சொல்ல நிறையவே இருக்கு அதுக்குமுதல்ல இவருடைய திருமணத்திற்கு ஒரு நண்பர்களுக்கும் சொல்லவில்லை அதுதான் வருத்தம்]படிக்கிற காலத்திலேயே தற்பாதுகாப்புகலையில் பல பட்டிகளை தனதாக்கிகொண்டவர் இவர் பாடசாலை வரும்பொழுது பொத்தகப்பையினுள் பொத்தகம் இருக்குமோ இல்லயோ பழய லட்டு மட்டும் தவறாமல் கொண்டுவரும் சிறந்த படிப்பாளி.... இதனால் சபாநாயகம் ஆசிரியரால் காக்கைதீவில புறா பிடிக்கதான் லாயக்கு என பாராட்டு பெற்றவர்... இவரிடம் குறிப்புபொத்தகம் கொடுத்துவிட்டு அதை திருப்பி பெறுகின்ற பொழுது இருக்கின்ற மகிழ்வு...............? கொடுத்த குறிப்பை விட கூட கிறுக்கல் தான் அதில்ல இருக்கும்,,,, நம்ம லோட் கனியிடம் 'சாளி' உந்துருளி வாங்கி நல்லுரை நடுநிசி 12.00 மணிக்கு சுற்றி வந்ததும் ஒரு சாதனை தான்,,,,,
பி. கு(இவருடைய சாதனைகள் நிறைய இருக்கு... ஆனால் எழுத வெளிக்கிட்டால் பாருங்கோ இடம் தான் கானாது)


சாதனைகள் தொடரும்ம்........

11 பின்னூட்டங்கள்:

சஞ்யே said...

வணக்கமுங்கோ!
யார் இந்த ரூபன் நம்ம பத்தையா?
அவனுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்காதே?

திலீபன் said...

விடுடா சஞ்சே, உள்ள போட்டதால படுத்திருந்து யோசிச்சிருப்பானோ என்னவோ ?

ருபன் said...

நன்றி சஞயே,திலீபன். கருத்துகளுக்கு நன்றி. பரவாயில்லை. நான் எப்படியாவது எழுதிறன். நான். அதே பத்தை தான்.எனக்கும் விசைப்பலகை தெரியும். நான் ஒன்றும் ரொட்டி மாதிரி vcd cutter தெரியாதவன் இல்லை

பகீ said...

அதுக்கேனப்பா ரொட்டிய இழுக்கிறியள்

சஞ்யே said...

மச்சான் திலீபன்,
நல்லா மிளகாய் அரைக்கிறாங்கடா!
ஒண்டா குப்பை கொட்டின எங்களுக்கு தெரியும்தானே பத்தை எப்படியெண்டு.
அவனுக்கு விசயம் தெரியாது எண்டு நான் சொல்ல வரேல்ல.
அவனக்கு இந்தளவுக்கு பொறுமை கிடையாது. அதோட நேரமும் கிடையாது.
இது வேற யாரோ ஒரு நாதாரி அவன்ட பெயரில விளையாடுது.
ஆனால் சீனிக்கு தெரியும் இந்த ரூபன் யாரெண்டு.
அவன் தானே Invite பண்ணியிருப்பான்.

திலீபன் said...

ஆமாம் சஞ்யே, ஆனா சீனி சொல்லமாட்டான். சொன்னா அவனையும் இல்லோ வம்புக்கு இழுப்பானுகள்.

ருபன் said...

வணக்கம் சஞேய்... என்ன இது சின்ன பிள்ளைதனமக இருக்கு. ருபன் என்ன கொக்கா. போகப் போக பார் யாரு இந்த ருபன் என்டு தெரியும் வணக்கம்.

பகீ.... நான் யாரெண்டு ஒருக்கா நம்ம பெடியளுக்கு சொல்லப்பா.... அது சரி ஏன் ரொட்டியை இழுத்தனான் என்டு கேட்ட பின்ன என்ன் தோசை மாதிரி ms office படிச்சுபுட்டு யாரும் தெரியாதவன் கேக்கும்போது PC application and office manegment படிச்ச்னான் என்று சொல்லுவதா..... ?இந்த பந்தா எல்லாம் நம் கிட்ட இல்லயப்பா........

பி.கு.
சஞேய் எதாவது collection இருந்தா எனக்கு ஒருக்கா call பண்ண மறந்துவிடத

திலீபன் said...

//சஞேய் எதாவது collection இருந்தா எனக்கு ஒருக்கா call பண்ண மறந்துவிடத //

இந்த ரணகளத்திலும் உனக்கொரு கிளுகிளுப்புக் கேக்குது...

பகீ said...

சஞ்சய் அது ரூபன் தானப்பா....

இங்க பார்ரா இப்ப தோசைய வம்புக்கு இழுக்கிறாங்கள்....

பகீ said...

////நல்லா குறி தவறாமல் கத்தி விசுவார். நம்ம தோசையை கேட்டால் தெரியும்....அதோட நல்லா வெடியும் போடுவார் அதை பற்றி தோசையின்ற அப்பாவிடம் கேட்டால் தெரியும்...////////

சூப்பர்........

கமலகரன் said...

என்னடா நீயுமா ரூபன்...........?

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com