நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..........

11/11/2008 அன்று SHEFFIELD CITY HALL இல் இடம்பெற்ற Sheffield Hallam University இன் பட்டமளிப்பு விழாவில் Bachelor of Science Information Technology(Software Engineering) பட்டம் பெற்ற எமது நண்பர்கள் சஞ்யே,பிரகாஷ்,ஜனகன் ஆகியோருக்கு JHC2003 இன் வாழ்துக்கள். இவர்கள் மென்மேலும் வாழ்வில் பல சிறப்புக்களை அடைய எங்கள் கல்லூரி ஞான வைரவர் அருள் புரிவாராக..





அத்துடன் இங்கே நண்பர்களின் பட்டமளிப்பு விழாவில் நண்பர் நிஷாந்தனும் கலந்து கொண்டுள்ளார்.

(நிழற்பட உதவி நன்றி நிஷாந்தன்)

டினோஜனின் பிறந்தநாள்



நமது நண்பன், கம்பராமாயண புகழ் வளர்க்கும் வித்தகர், " வாங்க பழகலாம் வாங்க பழகலாம் என்று தேடிச்சென்று அலுப்புக்கொடுக்கும் கலட்டி அம்மன் தொண்டர், எங்கள் அருமைத்தம்பி டினோஜன் அவர்கள் தனது 23 ஆவது பிறந்தநாளினை லண்டனில் ( இதை மட்டும் வடிவாக எழுதசொன்னான். டினோஜன் சரி தானே, உன் ஆசை நிறைவேறிச்சா.....) 08/11/2008 அன்று வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இவரை JHC 2003 சார்பாக நாமும் வாழ்த்துவதில் அகமகிழ்கின்றோம்.

நான் சிவராம சர்மா....

நான் சிவராம சர்மா. ஜோசி எண்ட பெயரை மறந்தவைக்கு அல்லது தெரியாதவைக்காக சொல்லுறன். யாழ்.இந்துவில படிக்கேக்க ஜோசி எண்டு ஒரு புனை பெயர் வச்சுக்கொண்டு திரிஞ்சதால அப்பிடித்தான் என்னை கூப்பிட்டாங்கள். இப்பவும் கொழும்பில ஆராவது என்னை ஜோசி எண்டு கூப்பிட்டா அது கட்டாயம் என்ட பள்ளிக்கூட பெடியங்களாத்தான் இருக்கும்.நான் இண்டைக்கு தான் இந்த பதிவில இணையிறன். நேற்றுத்தான் முதல்முதலா பாத்தன். சரியான சந்தோசமா இருந்தது. நான் கொழும்புக்கு வந்ததோட கன காலம் ஒருத்தரோடயும் தொடர்பில இல்லாம போனன். சஞ்ஜே எல்லாம் என்னோட ஒரே ஊரில இருந்து ஒண்டா பள்ளிக்கூடம் போறனாங்கள். இங்கால வந்த பிறகு இப்பதான் அவனைப்பத்தி இதில பாத்தன். இப்ப இதில சேர்ந்து உங்கட பதிவுகளை பாக்க சரியான சந்தோசமாயும் பெருமையாயும் இருக்கு. என்ட ஞாபகங்களை நேரம் கிடைக்கேக்க எழுதுவம் எண்டு நினைக்கிறன்.

பிரசாத்தின் பிறந்தநாள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரகாஷ்..

(21.10.2008) கனிக்கு பிறந்த நாளு டோய்!







(21.10.2008) பிறந்த நாள் காணும் அருமை அண்ணன் - சூப்பர் ஸ்டாரின் தம்பி
பத்திரிகையுலக சக்கரவர்த்தி - வலைப்பதிவு வித்தகர் - சைதைச் சுனாமி - பாசக்கிளி - எழுத்துலக எஜமான் -நரம்படி மன்னர்- உயர்திரு - உயர்உயர்திரு. கனி என்ற சூப்பர் ஸ்டார் தம்பிக்கு - யாழ்ப்பாணம் வாழ் - Colombo வாழ் - SriLanka வாழ் - உலக வாழ் மலரும் நினைவுகள்சார்பாக எங்களின் மனமார்ந்த - இதயப் பூர்வமான - உளம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாசநெஞ்சன் அண்ணன் கனி அவர்கள் (21.10.2008) இரவு - 8 மணி அளவில் - Landon கிண்டி - லீ ராயல் மெரிடியனில் - அன்னதானம் வழங்குவார்.

யாழ்ப்பாண.Colombo நண்பர்களுக்கு கனி வீட்டில்-அன்னதானம் வழங்குவார்.
பின் குறிப்பு : அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சாப்பாட்டு ராமன்கள்


















நமது நண்பர்களின் சாப்பிடும் திறமையினை உலகமே வியந்து பார்ப்பதை நினைத்து ஒருபக்கம் சந்தோசம்.ஆனால் அவர்கள் காலி செய்யும் பில்லை நினைக்க எவ்வளவு குடும்பம்
வங்குரோத்து நிலைக்கு போகபோகுதோ தெரியவில்லை.

ஓராண்டு கடந்தோம் !

பிறந்த தின வாழ்த்துக்கள்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சஞ்யே 13.09.2008 இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....


"வாழ்க வளமுடன்"



நல்லூரில் அன்னதானத்தில் தயிரும் தோசையும்......

நண்பர்களே இந்த பதிவின் தலைப்பை பார்த்து குழம்பிப்போயிடாதீர்கள்.நல்லூர் அன்னதானத்தில் தயிரும் தோசையும் என்பது அங்கே கொடுத்த சாப்பாடு இல்லை.நம்ம நண்பர்கள் உமையும் (தயிர்) சிறீசங்கரும் (தோசை) அன்னதானத்தில் முன்வரிசையில் அடிபட்டு கலந்துகொண்டதை உங்களுக்கு அறிவிக்கவே அந்த தலைப்பு. தற்போது இருக்கும் நாட்டு அசாதாரண சூழ்நிலையையும் பொருட்படுத்தாது நமது நண்பர்கள் தயிரும் தோசையும் வருடா வருடம் கலந்து கொள்ளும் நல்லூர் அன்னதானத்தில் இம்முறையும் கலந்து கொண்டு தமது சாதனையை உலகறிய செய்துள்ளார்கள். இவர்களை நாமும் பாராட்டுவதுடன் இவர்களின் அன்னதான சாதனை மென்மேலும் தொடர நல்லூர் முருகன் அருள் புரிவாராக.

இவர்களது அன்னதான சாதனை பன்றிக்கோட்டு பிள்ளையார் கோவிலிலும் சாந்தையர்மடம் பிள்ளையார் கோவிலிலும் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதைனையும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.





பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

19.08.2008 அன்று BMICH இல் இடம்பெற்ற BCAS CITY CAMPUS இன் பட்டமளிப்பு விழாவில் Quntity Serveying இல்Higher National Diploma பட்டம் பெற்ற எமது நண்பர்கள் பிராதப்,சுகிந்தன், டினோஜன் ஆகியோருக்கு JHC2003 இன் வாழ்த்துகள். இவர்கள் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய எங்கள் கல்லூரி ஞான வைரவர் அருள் புரிவாராக.

நண்பர் சுகிந்தன் டுபாய்யில் வேலையில் இருப்பதால் அவரால் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

திலீபனுக்கு இன்று பிறந்தநாள்........

எல்லோராலும் செல்லமாக நாய் தில்லி என அழைக்கப்படும் நமது நண்பன் திலீபன் அவர்கள் தனது 24 ஆவது பிறந்தநாளை வெகுவிமர்சையாக 29.08.2008 இன்று கொண்டாடுகின்றார்.இவரை நமது JHC 2003 சார்பாகவும் நமது நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்தி இவரது பன்றிக்கோட்டு பிள்ளையாருக்கான தொண்டுசேவை நீடிக்கவும் எல்லாம் வல்ல கொக்குவில் மஞ்சவனப்பதி முருகனை பிரார்த்திக்கின்றோம்.


பி.கு : இவரது பிறந்தநாளினை முன்னிட்டு நண்பன் தயிர் அவர்கள் ஒழுங்குசெய்துள்ள பீசா பார்ட்டிக்காக நமது நண்பர்கள் அனைவரும் தெகிவளை பீசா சென்ரரில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலதிக தகல்களுக்கு நண்பன் தயிரை தொடர்பு கொள்ளவும்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சு.பா.........

நமது நண்பன் சு.பா (விஜித்) அவர்கள் தனது 24 ஆவது பிறந்தநாளினை 29.08.2008 அன்று கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.அவரை JHC 2003 சார்பாகவும் நமது நண்பர்கள் சார்பாகவும் வாழ்துகின்றோம். இவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றிய தகவல்களை நமது JHC 2003 கொழும்பு செய்தியாளர் நண்பன் கமல் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

விழுதுகள் !

இந்து அன்னையின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட "விழுதுகள்" இசை வெளியீட்டிலிருந்து சில பாடல் தொகுப்புகள்.













நன்றி http://www.jaffnahindu.org/

The funny days in sheffied with Nishanthan


@ the University :








@ the Food Festival :

@ the st Mary's Church :

@ the Winter Garden :



@ my Room :





@ the Pease Park :





நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com