தமிழில எழுதலாம் வாங்கோ

வகுப்பில மாணவர்கள் (????) எல்லாரும் இருக்கினம். ஆசிரியர் சீனி வாறார்.

சீனி : குட்மோர்னிங். நான் இண்டைக்கு தமிழில எப்பிடி பதிவில எழுதிறது எண்டு சொல்லித்தரப்போறன்

சஞ்யே : இங்க என்ன குட்டா இருக்கு. அதொண்டும் திருப்பி சொல்லேலாது வகுப்பை தொடங்கு

திலீபன் : டேய் தயிர்! வதைக்கப்போறான்டா. தெரிஞ்ச விசயத்தையே ஜெயப்பா மாதிரி திருப்பித்திருப்பி சொல்லப் போறான்.

தயிர் : சரி வந்தவன் அறிக்கையை விட்டுட்டு போகட்டும். பேசாமல் இரு.

சீனி : என்ன பின்னுக்கு சத்தம். போட்டா வகுப்பு எடுக்க மாட்டன் திரும்பி போயிருவன்

ரூபன் : சரி அப்ப போ.

சஞ்யே : நான் அப்பவே சொன்னான் இவன் ரூபன் இல்லையெண்டு. பார் வகுப்பை குழப்பிறான்.

சீனி : பரவாயில்லை பெரிசா சத்தம் வராட்டா சரி.

ரூபன் : பெரிசாத்தான் வரும். எடுக்கிறண்டா எடு.

சீனி : சரி வந்திட்டன் எடுப்பம்.
முதலில www.jaffnalibrary.com/tools/unicode.htm எண்ட பக்கத்துக்கு போங்கோ.

ஜிபி : சரி

சீனி : பாமினியில ரைப்பண்ண தெரிஞ்சாக்களெண்டா……… இப்ப ஒரு கேள்வி. யார்யாருக்கு பாமினியில ரைப்பண்ண தெரியாது.

(கனி கை உயத்துறார்)

கனி : எனக்குத் தெரியாது.

சீனி : சரி உங்களுக்கு எதில ரைப்பண்ண தெரியும்??

கனி : கீபோட்டில

சீனி : அப்ப மற்றாக்கள் என்ன மௌசாலயே ரைப் பண்ணுறவங்கள்?? நீ லண்டன் போயும் விளக்கமில்லாமதான் இருக்கிறா. உன்ர கதைக்கு பிறகு வருவம்.

பாமினியில ரைப்பண்ண தெரிஞ்சாக்கள் பாமினி எண்டு இருக்கிறதை செலக்ற் பண்ணீற்று மேல் பெட்டியில தட்டச்ச கீழ்ப்பெட்டியில தமிழில வரும்.

இப்ப கனி உங்கட பிரச்சனையை பாத்தா……

கனி : இங்க எனக்கொரு பிரச்சனையும் இல்லை. நான் தமிங்கலத்தில அடிக்கிறனான். சில எழுத்துக்கள் தெரியாட்டியும் "ங்"க்கு "ன்", ரெட்டைக்கொம்புக்கு ஒற்றைக்கொம்பு, "கி"க்கு "கு" "கீ"க்கு "கூ" எண்டு போட்டு எல்லாம் சரிப்படுத்தீருவன்.

சஞ்யே : நீ சரிப்படுத்தீருவ ஆனா நாங்கள் வாசிக்கிறதுக்கு ஒரு கொன்வேட்டர் எல்லோ செய்து அனுப்ப வேண்டி இருக்குது.

பணிஸ் : கொன்வேட்டர் எண்டால் அது அனுப்ப MOD கிளியரன்ஸ் ஒண்டும் எடுக்க தேவையில்லையோ??

ரூபன் : அதொண்டும் தேவேல்ல. விசிடி கட்டரோட கட்டி அனுப்பலாம் நீ கவனி.

சீனி : இப்ப கனி தங்கிலீசுக்கு என்னென்ன எழுத்தடிச்சா என்னென்ன எழுத்து வரும் எண்டு இந்த அட்டவணையை பாத்து தெரிஞ்சுகொள். பிறகு எழுத்து பிரச்சனைகள் வராது.


ஜிபி : பிறகென்ன..

சீனி : பிறகென்ன ரைப்பண்ணி கீழ்பெட்டியில தமிழில வந்ததை கொப்பி பண்ணி போட வேண்டியதுதான்.

திலீபன் : போட்டா உடையாது???

சீனி : நீ இப்படியே கேட்டு உருப்படாம போ. நான் போட்டு வாறன்.

10 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ஆசிரியர் சீனி(பகீ)..........
//தெரிஞ்ச விசயத்தையே ஜெயப்பா மாதிரி திருப்பித்திருப்பி சொல்லப் போறான்.//
உணக்கும் ஜெயப்பாவுக்கும் என்ன தொடர்பு (மத்தித்தரக்கடலிலையோ)அப்படியானால் {தம்பி டேய்... த.த.தம்பி என்னைப்பற்றி தெரியாது உணக்கு....}ஒன்ரையும் கானமே...(வகுப்பில)

Anonymous said...

//வகுப்பில மாணவர்கள் (????) எல்லாரும் இருக்கினம். //
நம்ம ...
சூபாவ,கந்தாவ(டவுட்டுக்கனெசனை) மறந்திட்டாய்.....

சஞ்யே said...

//கனி : இங்க எனக்கொரு பிரச்சனையும் இல்லை. நான் தமிங்கலத்தில அடிக்கிறனான். சில எழுத்துக்கள் தெரியாட்டியும் "ங்"க்கு "ன்", ரெட்டைக்கொம்புக்கு ஒற்றைக்கொம்பு, "கி"க்கு "கு" "கீ"க்கு "கூ" எண்டு போட்டு எல்லாம் சரிப்படுத்தீருவன்.//

ரொம்ப சரியாக சொன்னாய் பகீ!
இவன் தமிழை ரொம்பவும் கொல்லுறான்.

அப்புறம். வகுப்பு நல்லாயிருக்குது. தொடர்ந்தும் பல வகுப்புக்கள் இந்த பதிவில் இடம்பெறவேண்டும்.

மாயா said...

சஞ்யே : நீ சரிப்படுத்தீருவ ஆனா நாங்கள் வாசிக்கிறதுக்கு ஒரு கொன்வேட்டர் எல்லோ செய்து அனுப்ப வேண்டி இருக்குது.


சரியாகத்தான் சொல்லியிருக்கு :))
கனியோட பதிவை வாசிக்க ரொம்பக்கஷ்டமாயிருக்கு

நிஷாந்தன் said...

வகுப்பு நல்லா இருக்கு பகீ !
அடுத்த வகுப்பு எப்ப என்று சொன்னா நானும் வருவேன் தானே !!!!!

நா.திலீபன் said...

அடப்பாவி மொத்தப் பேரையும் மென்டலாக்கிட்டு போறானே.. தம்பி பகீ, உனக்கு முதுகு உளையுது போல....

ரூபன் said...
This comment has been removed by the author.
ரூபன் said...

வணக்கம் சீனி,, பாமினியில ரைப்பண்ணினால் பாமினி ஓன்றும் சொல்லமாட்டாவா,,,,,,,,,,,? அமாம் அவாவை எந்த இடத்தில சந்திக்கலாம்,,,,,,,,,,,,,?

கனி said...

வனக்கம் சஞ்யை , மாயா , ரூபன் , பகி

தமிழை யாரும் கொல்லவும் முடியா அதேபோல் தமிழனை யாரும் கொல்லவும் முடியா.
இன்கே தமிழ் கொலை நடப்பதாக சில பேர் தங்கள் மனவேதனைகளை கொட்டி இருந்தார்கள்.
அவர்கள் முதலில் தங்கள் பெயர்கள் சுத்த தமிழில் வைத்துவிட்டு பிறகு தமிழ் கொலை பற்றி கதைத்தால் நல்லதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது நண்பர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தளம் என்று நினைக்கின்றேன். இது ஒன்றும் தமிழ் மொழி விரிவாக்க அமைச்சின் தளம் இல்லை.

அதனால் எனக்கு தரப்பட்ட உரிமையை பயன்படுத்தி நான் எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.
னான் ஒன்றும் அடுத்தவன் பெயரில் வந்து இங்க ஒன்றும் எழுதவில்லை ( விளக்கமானவர்களுக்குவிளங்கும் ) . எழுத்து பிழை இருந்தால் அதை எப்படி திருத்துவது என்று சொல்லி தந்துட்டு பிறகு தமிழ் கொலை பற்றி கதைத்தால் நல்லதாக படும் என்று நான் நினைக்கின்றேன். பகீ உனது உதவிக்கு நன்றி. மற்றவர்கள் பகி மாதிரி நடக்க முனைவது சந்தோசத்திற்கு உகந்தது.

இனிமேல் எழுத்து பிழைகளை தவிர்த்து கொள்ள முயற்சி செய்கிறேன்

எல்லோரும் தமிழ் ஆசிரியர்கள் ஆக கூடாது

பிழைகள் சுட்டி காட்டப்படுவது நல்லது, அத்துடன் அதுக்கான வழிமுறைகளும் சொல்லப்படுவது சிறந்தது.

yallboys said...

enna kodumai sar........

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com