நிசாந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



"அன்னையின் பிள்ளையாய்
அறுசுவையின் மன்னனாய்
ஆற்றல் பல பெற்று
ஈகை குணத்துடன்
உவகை என்றும் நிலைத்து
ஊருக்கு நல்லது செய்து
என்றும் வாழ்வினிலே
ஏற்றம் பல பெற்று
ஐயம் (மற்றவர்களுடைய) களைந்து
ஒருத்தியை திருமணம் செய்து
ஓருயிர் ஈருடலாய்
ஔடதம் தேவையே இல்லாமல்
என்றும் வாழ்வாங்கு வாழ
மனதார வாழ்த்துகிறேன்".

"கைப்பேசியில் சொல்ல
நினைத்த வாழ்த்தை
கரங்கள் உள்வாங்கி
எழுத்தாணியால்
எழுதியது
கவிதையானது..

குறிப்பு: "ஒவ்வொரு பிறந்த நாளிலும் வயதோடு, அழகையும் ஏற்றிக் கொள்கிறாய்!"

பிறந்தநாள் வாழ்த்துகள்

க.நிஷாந்தன் (27/06/2008)இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....

வள்ளல் கொடுத்தால்தான் கொடை உண்மைதான் -ஆயினும் வார்தையால்

அணைத்தாலும் அது கொடைதானே

இல்லை உனக்குவோர் பரிசு உண்மைதான் -ஆயினும் இதயத்தால்

ஏந்திவிட்டால் அது பரிசுதானே

நல்லோர்கள் புடைசூழ நாற்திசையும் தமிழ்மணக்க நடைபோடு

நடைபோடு நல்லதமிழ் மகனாக

சொல்லில்லை சொல்லில்லை நெஞ்சத்தின் கவிசொல்ல சொல்லாமல்

போனாலும் சுவையன்றோ நட்புறவில்

உள்ளத்தின் உணர்வுகளை ஒருமுகமாய்க் குவிக்கின்றேன் ஓவியமாய்க்

காவியமாய் வாழ்வாங்கு வாழ்கவாழ்க

ஆயுளென்று நூறிருந்தால் அதுவொன்றே பெரும்பேறு அடடாவோ

நீயதிலே காவாசி வென்றுவிட்டாய்

வாயாரப் புகழ்ந்தாலும் விடுபட்டுப் போகுதடா வற்றாத

புகழோடு எந்நாளும் வாழ்கவாழ்க

நோயற்ற வாழ்வோடும் நொடிதவறா சிரிப்போடும் நயாகனாய்

பொழிவாக நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க

என்றும் அன்புடன்

என் இதய வாழ்த்து

"வாழ்க வளமுடன்"

சிறிசங்கரின் பிறந்தநாள் பார்ட்டி.

சிறிசங்கர் இன்று தனது 24வது பிறந்தநாள் பார்ட்டியை நண்பர்களுடன் கொண்டாடியதாக அவரின் செய்தி தொடர்பாளர் விஜித் தகவல் வெளியிட்டுள்ளர் அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு இதனை உடன் JHC2003 பதிவில் இடும்படியும் ப்ணித்துள்ளர்.....







பிறந்தநாள் வாழ்த்துகள்.

சிறிசங்கர் (08/06/2008)இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு அவரின் சாந்தையர் மடப் பிள்ளையார் அருள் புரிவாராக....

"வாழ்க வளமுடன்"

சு,பாவின் நெடுநாள் ஆசை..

நம்ம விஜித் யாராவது ஒரு பொண்ணுகூட ஊர் சுத்தணும் என்று பல நாட்களாக கனவு கண்டு அதற்கான ஆயத்த பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திகொண்டுள்ளதாக நமது கொழும்பு செய்தியாளர் கமல் தெரிவிக்கின்றார். அதற்காக சு.ப வெள்ளவத்தையில் உள்ள புடவைகடைகளில் இருக்கின்ற பொம்மைகளில் கை போட்டு பழகுவதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுப்பிட்டி நந்தன் மலேசியாவில்...

நம்ம சிறுப்பிட்டி நந்தன் மலேசியாவிற்கு பயணமாகியுள்ளார் என அவர் தரப்பில் பேச வல்ல அதிகாரி தெரித்துள்ளார் அத்துடன் அவர் பயணமாவதற்கு முதல் நாள் நண்பர்களுக்கு விருந்து ஒன்றும் கொடுத்துளளார் அது தொடர்பான புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளன....




[JHC2003 செய்திகளுக்காக உங்கள் பிரதாப்]

கமலின் பிறந்தநாள் பார்ட்டி...

இவன் எங்கட கமல் பாருங்கோ.கனி தன்னை கஞ்சக்கமல்,பிறந்தநாள் பார்ட்டி வைக்கதவன் என்று POST போட்டதற்கு கமல் ஒரு POST போட்டான் அதில் சர்ச்சை உருவானது அது என்ன என்று கேட்ட கமல் போட்ட புகைப்படங்களை நண்பர்கள் தங்களுடைய பார்ட்டிகளில் எடுத்தது என்பதுதான் அது இருக்கட்டும் ஆன இந்த வருடம் பார்ட்டி வைச்சவன் கமல் அந்த புகைப்படங்களும் நண்பர்கள் அவனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும்...






எமது நண்பர்களின் இலண்டன் பயணம்.

எமது நண்பர்கள் சஞ்யே,க.பிரகாஷ் தங்கள் உயர்கல்வியை தொடர்வதற்காக அவர்களின் SLIIT நண்பர்களுடன்31.05.2008 அன்று இலண்டன் பயணமானார்கள் .இவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமைய J.H.C 2003 சார்பாக வாழ்த்துக்கள் மேலும் சகல வளங்களையும் பெற்றிட எங்கள் கல்லூரி ஞான வைரவர் அருள் புரிவாராக.மற்றும் நண்பர்களின் விருந்தில் கலந்து கொண்ட எங்கள் நண்பர்களும் ,நண்பர்கள் விமான நிலையம் புறப்பட முன் எடுக்கப்பட புகைபடங்களும்...........



(பிற்குறிப்பு:- இந்த POST போட O.C யில் P.C ஒன்று தந்து உதவியதற்கு பிரசாத்திற்கும் NASA NET CAFE க்கும் நன்றிகள்)

வணக்கம் அன்பு நெஞ்சங்களே !

வணக்கம் அன்பு நெஞ்சங்களே !



நாம் இங்கு நலம்.



ஒருவாறு எமது life style ஐ மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
உதாரணத்துக்கு காலை lectures முடிந்ததும் எந்தக் கடையில் என்ன சாப்பிடுவது என யோசித்த நாட்கள் போய் என்ன சமமைப்பது என சிந்திக்கிறேன். இரவு Room க்கு போகும்போது என்ன படத்தைப் பார்பது என யோசித்து DVD வாங்கிய காலம் போய் க்கு போய் இரவு சமைப்பதற்கு பொருட்கள் வாங்குவதாகி விட்டது.



என்ன செய்வது?



மற்றும் காலநிலை வேறு மோசமாகத்தான் உள்ளது. winter க்காக வாங்கிய coat எல்லாம் summer க்கே தேவைப்படுகிறது.


வேறு என்ன? மிகுதி விரிவாக.

நன்றி

வணக்கம்



தமிழரின் தாயகம் என்றும் தமிழீழமே!

கந்தாவின் பட்டிணத்து பயணம்

நமது கந்தா அதாவது பிரகாஸ் லண்டன் பட்டிணத்துக்கு தனது SLIIT பட்டாளம் சகிதம் புறப்பட்டு சென்றுள்ளதாக நமது கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இவரது பயணம் சம்பந்தமான தகவல்களும் புகைப்படங்களும் வெகு விரைவில்..............

கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கஞ்சக் கமல் தனது 24 ஆவது பிறந்தநாளை இன்று (31.05.2008) நீலக்கலர் சேர்ட்டு போட்டு வழமைபோல நண்பர்களுக்கு பார்ட்டி வைக்காமல் வெகு விமர்சையாக ( இது கமல் சொல்ல சொன்னது) கொண்டாடினார்.எமது கமலை நம் நண்பர்கள் சார்பாகவும் JHC 2003 சார்பாகவும் வாழ்த்தி தனது வெட்டி வேலையை தொடர்ந்து ஒரு பிரச்சினையும் இல்லாமல் செய்ய கந்தர்மடம் நாய்க்குட்டி வைரவரை பிராத்திக்கின்றோம்,

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com