புது வடிவம்

தொடங்கி சில நாளிலயே மலரும் நினைவுகள் ஒரு புதுவடிவம் எடுத்திருக்குது. இதில என்ர பங்கு என்னெண்டா நீதானே கனகாலமா புளொக்கரில இருக்கிறா ஒருக்கா புதுசாக்கி விடெண்டாங்கள். ஆக்கி விட்டிருக்கு. முதலிருந்த அடைப்பலகைய பாத்த உடனேயே ஒரு போமாலிற்றிக்கு எண்டாலும் நல்லா இருக்கு எண்டு சொல்லாமல் "நல்லாயில்ல" எண்டு சொன்ன திலீபன்தான் இந்த உடனடி மாற்றத்திற்கு காரணம்.

மலரும் நினைவுகள் எண்டா பிளக் அன்ட் வைற்றில தான் இருக்க வேணும் எண்டு நான் சொன்னாலும் இல்லையில்ல பள்ளிக்கூட கலரில போடுவம் எண்டு சொல்லி இந்தா நீலமுமம் வெள்ளையுமா இப்ப வந்திட்டுது. (வெள்ளையும் இருக்கு சொன்னா நம்புங்கோ.)

பிறகு பனர் சரியான பெரிசா இருக்கு மேல இருக்கிறத எடுத்து விடு எண்டு உமைகரன் சொன்னான் இப்ப நல்ல சின்னனாக்கி இருக்குது. இதுக்கு மேல சின்னனாக்கினா கண்ணுக்கு தெரியிதில்லை. இந்த லோகோ எப்பிடி இருக்குது எண்டு பின்னூட்டத்தில போட்டு விடுங்கோ.

பின்குறிப்பு : ரூபன் எல்லாம் சரி பேசாம எழுத வாருங்கோ..... (சஞ்சய் சந்தேகம் தீர்ந்துது தானே??)

5 பின்னூட்டங்கள்:

உமைகரன் said...

மிக்க நன்றி பகீ..........

...அழகான வடிவமைப்பு. அற்புதமான உள்ளடக்கம். மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள். ...

மாயா said...

அழகான வடிவமைப்பு

// பகீ அதெப்படி WordPress இன்
Template ஐ Blogger க்குள்ள புகுத்தமுடிந்தது // :))

திலீபன் said...

வணக்கம் உமை,

நல்லா இருக்கிறது. ஆனால் logo Microsoft Internet Explorer க்கு ஏற்றதாக வடிவமைக்க வேணும் போல.... கொஞ்சம் பிரச்சினை கொடுக்குதுடா...

பகீ said...

நன்றி உமைகரன்

மாயா இது வேர்ட்பிரஸ் ரெம்பிளற் அல்ல. உண்மையில் துருபலின் ரெம்பிளற்

திலீபன் அது சரியாத்தான் இருக்கு. உங்கள் IE ஐ மேம்படுத்தி பாருங்கள்.

ருபன் said...

வணக்கம் சீனி,, உன்னுடய இந்த மெருகூட்டல் நல்லாக இருக்குது இதை மேலும் மேலும் சிறப்பாக ஆக்கவேண்டும்,,, அதுடன் நமது பள்ளிக்கூட இலச்சனையோ அல்லது வாசகமோ போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் (அது தனிப்பட்ட முறையில போடமுடியாதா.......?)

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com