பிறந்தநாள் வாழ்த்துகள்

க.நிஷாந்தன் (27/06/2008)இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....

வள்ளல் கொடுத்தால்தான் கொடை உண்மைதான் -ஆயினும் வார்தையால்

அணைத்தாலும் அது கொடைதானே

இல்லை உனக்குவோர் பரிசு உண்மைதான் -ஆயினும் இதயத்தால்

ஏந்திவிட்டால் அது பரிசுதானே

நல்லோர்கள் புடைசூழ நாற்திசையும் தமிழ்மணக்க நடைபோடு

நடைபோடு நல்லதமிழ் மகனாக

சொல்லில்லை சொல்லில்லை நெஞ்சத்தின் கவிசொல்ல சொல்லாமல்

போனாலும் சுவையன்றோ நட்புறவில்

உள்ளத்தின் உணர்வுகளை ஒருமுகமாய்க் குவிக்கின்றேன் ஓவியமாய்க்

காவியமாய் வாழ்வாங்கு வாழ்கவாழ்க

ஆயுளென்று நூறிருந்தால் அதுவொன்றே பெரும்பேறு அடடாவோ

நீயதிலே காவாசி வென்றுவிட்டாய்

வாயாரப் புகழ்ந்தாலும் விடுபட்டுப் போகுதடா வற்றாத

புகழோடு எந்நாளும் வாழ்கவாழ்க

நோயற்ற வாழ்வோடும் நொடிதவறா சிரிப்போடும் நயாகனாய்

பொழிவாக நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க

என்றும் அன்புடன்

என் இதய வாழ்த்து

"வாழ்க வளமுடன்"

4 பின்னூட்டங்கள்:

lottery said...

Yutarets! kasagad bah!

உமைகரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

பகீ said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிசாந்தன்...

கமலகரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நிசாந்தன்...

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com