கள்ள சாமியர்கள்


நமது நண்பர்கள் சாமியாராகினா எப்பிடி இருக்கும் என்னு ஒரு சின்ன விபரீத ஆசை. இவங்க ஒருத்தரும் சாமியார் ஆக மாட்டங்க. ஏன் என்டா சாமியார் ஆகின கல்யாணம் கட்டகூடாது எல்லோ. இவங்க எப்படா கல்யாணம் கட்டலாம் என்னு காத்துகொண்டு இருக்கிறவங்க..

புகைப்பட உதவி : தயிர்

குப்புசாமியின் சாதனை.........!!!!

எமது அன்பு நண்பன் இடைகாடு குப்புசாமியான நம்ம சுகந்தனின் நெறியாள்கையிலும் தாயாரிப்பிலும் இயக்கத்திலும் வெளிவர இருக்கின்ற அவதாரம் திரைப்படத்தின் முன்னோட்டம். இவரது திறமை மென்மேலும் வெளிவர நண்பர்கள் நாம் வாழ்த்துகின்றோம்...


கலக்குட குப்பு!!!!!!!!!!!!!!!!!

பிறந்த நாள் வாழ்த்துகள் -- ஒரு தட்டில் இரண்டு சாப்பாடு !!!!!!!

இன்று தமது 24 ஆவது பிறந்த நாளை கொன்டாடும் எமது ஆருயிர் நண்பர்கள் பகீரதன் மற்றும் ரவிசங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

நிசாந்தனும் ஒரங்கொட்டானும்................... !!!!! நவீன காதல்


என்ன கொடுமை சேர்,,,,,,,,,,,,,,,,,,,,

கங்காராமவில் நிசாந்தன் !



இன்று காலை 8.30 மணிக்கும் 10.00 மணிக்கும் இடையில் கங்காராமவில் காணப்பட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கங்காராமவிலுள்ள Lovers Island இல் ஓரங்குட்டானுடன் இருந்ததை உறுதிப்படுத்தி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதே வேளை ஓரங்குட்டானுக்கான நேர்முகத் தேர்வு ஒன்றுக்காகவே அவரை நிசாந்தன் அழைத்துச் சென்றதாக நிசாந்தன் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருந்தும் அங்குள்ள Lovers Island இனுள் இத்தகைய நேர்முகத்தேர்வுகள் நடைபெறுகின்றனவா என்பதை இதுவரை எம்மால் உறுதி செய்ய முடியவில்லை.


JHC 2003 செய்திகளுக்காக
காரை மைந்தன் P.K.பாலன்

வணக்கம் சேர்.......................!!!!!!!!!!!!


என்னதான் நமது நண்பர்கள் அரட்டை அடித்து ரோட்டு சுத்தினாலும் காரியத்தில கண்ணாயிருப்பாங்கள். நமது நண்பன் ஒருத்தன் ஆசிரியர் ஆகி நமக்கு பெருமை சேர்த்ததுக்கு அவனை வாழ்த்துவதில் நாம் அக மகிழ்கின்றோம்.அவர் ஆசிரியர் ஆகி குடும்ப தலைவனாகவும் ஆக ஆசை படுகின்றார்.அதுவும் நல்ல படியாக அமைய வாழ்த்துகின்றோம்.
அவருக்கு ஒரே ஒரு பிரச்சினை, தன்னை ரவி சேர் என்று அழைக்க விருப்பமாம், ஆனால் தன்னை படிப்பித்த ரவி சேர் ஒருவர் இருக்கின்றார். ஆதலால் இவரை எப்பிடி அழைப்பது... நண்பர்களே நீங்கள் தான் ஒரு நல்ல பெயரை சூட்டனும் நமது தோழனுக்கு..

பி.கு : கமல் இவனை பார்த்தாவது நீ திருந்து

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com