குப்புசாமியின் நம்பமுடியாத சாதனைகள்.......பாகம் 1


நமது நண்பர்களின் சாதனைகளைப் பற்றி சொல்லுவும் என்று வெளிக்கிடும்போது முதன்முதலில் நினைவுக்கு வருவது நமது இடைக்காடு பெற்ற தவப்புதல்வன் சுகந்தமாறனின் சாதனைகள் தான். ஏன் என்றால் சாதனைகள் செய்வதில் அவனுக்கு நிகர் அவனேதான்.அவனின் சில சாதனைகளை பட்டியல் போட்டு உங்களின் நினைவினை ஒருகணம் பழைய பள்ளிபருவத்திற்கு அழைத்துச்செல்லலாம் என்று நினைக்கின்றேன்.


1. ஈக்கு வாணம் விட்டு கை உடைந்தது


நான் நினைகின்றேன் அது ஒரு பள்ளி சாதாரண தர பரீட்சை நெருங்கும் காலம், அப்போது நானும் பாலனும் குப்புசாமியும்(சுகந்தமாறன்) combined study என்று எங்க வீட்டில் அரட்டை அடித்த நேரம். சரியாக கிறிஸ்மஸ்க்கு இரண்டு நாட்கள் முந்தி இப்படியாக நாங்கள் மூன்றுபேரும் படித்துக்கொண்டு இருக்கிறப்போ பாலன் நான் வாங்கி வைத்த ஈக்குவாணத்தை கண்டுட்டான், அது கிறிஸ்மஸ்க்காக வாங்கினது.அதைப்பார்த்த பாலனுக்கு இருப்பு கொள்ளவில்லை.அதைவைத்து ஏதாவது செய்யணும் என்று துடித்தபோது எந்த விசயத்தையும் பிளான் பண்ணி செய்வதில் வல்ல நமது குப்புசாமியின் மூளையில் ஒரு பொறி தட்டியது.அந்த ஈக்குவாணத்தை நம்ம தயிர் ( உமைகரன்) வீட்டுக்கு மேல கொண்டுபோய் விடணும் என்னு சொன்னான். சரியாக நடுஇரவு 12 மணிக்கு பாலனும் குப்பனும் ஏதோ பெரிய தாக்குதலுக்கு போற கெட்-டப் உடன் ஈக்குவாணத்தை எடுத்துக்கொண்டு எங்க வீட்டு படலையினையும் ஏறித்தாண்டி வெளியில் போய்ட்டாங்க. நானும் இவர்களை விட்டுட்டு வீட்டில் இருந்தேன். திடிரென எனது வீட்டுக்கு மேல ஈக்குவாணம் செல்லும் ஒளி தெரிந்தது. இந்த இரண்டு கழுதைகளும் என்னிடமே ஈக்குவாணம் வாங்கு அதை என் வீட்டிலயே விட்டு என்னை முட்டாள் ஆக்கிட்டாங்க. சற்று நேரத்தில் குப்பனும் பாலனும் வந்தார்கள்.அப்போ குப்பன் கையை பிடிச்சுக்கொண்டு வந்தான், என்ன என்று கேட்டபோது ஈக்குவாணம் விட்ட விசையில் கை மூட்டு கழண்டுபோட்டுதாம். நாங்க எல்லாரும் சிரித்த போது அவன் சொன்னான், டேய் முட்டாள் பசங்களா நீங்கள் நீயுட்டனின் 3ம் விதி படிச்சது இல்லையா, போய் படிச்சிட்டு வாங்க பிறகு நம்புவீர்கள் என்றான், இப்பகூட நீங்கள் கேட்டாலும் இதையே சொல்லுவான். இந்த உலகத்திலே ஈக்குவாணம் விட்டு கை கழண்ட ஒரே ஒருத்தன் நம்ம குப்புசாமி தான்.


2. கத்தி வீச்சு


கிறிஸ்மஸ் காலங்களில் நமது நண்பர்கள் கைகளில் பட்டாசுகளுக்கு குறைவிருக்காது. அந்த பட்டாசுகளை நமது நண்பர்களின் வீடுகளில் எறிந்துவிட்டு ஓடிமறைவதில் ஒரு இன்பம்.இதில் நமது குப்பன் தான் வல்லவன்.( குப்பனும் பாலனும் தோசைவீட்டில் மூலை வெடி எறிந்து தோசையின் அப்பா கலைக்ககலைக்க ஓடித்தப்பிய அனுபவவும் குப்பனிடம் உண்டு ).ஆனால் இயமனுக்கே இடியப்பம் தீத்தினது போல குப்பனின் வீட்டுக்கே நமது நண்பர்களினால் பட்டாசு வீசப்பட்டுவிட்டது. இது இப்பிடியாக இருக்க ஒருநாள் குப்பனின் வீட்டில் மூலைவெடி போடுவது என்று தீர்மானித்து நமது நண்பர் பட்டாளம் ஆயத்தமான போது இதை சிலர் மூலம் குப்பனின் காது அறிந்துவிட்டது. இதை அறிந்த குப்பு 3 மேசைக்கத்தி, 1 மீன்வெட்டும் அறிவாள், 1 அன்ரனா பைப் என்பவற்றை தயார்நிலையில் வைத்துக்கொண்டு மாலை 6 மணி முதல் சாப்பிடாமலும் தண்ணீர்கூட அருந்தாமலும் தனது வீட்டு படலை அருகே மறைந்திருந்தான். ஆனால் நண்பர்கள் அவ்விடம் போனதோ இரவு 10 மணியளவில். அவ்வளவு நேரமும் வீட்டார் சொல்லையும் பொருட்படுத்தாமலும் உணவினை கூட கவனிக்காமலும் தனது பிளானை சரியாக செய்வதில் விழிப்போடிருந்தான் நமது குப்பன். இது தெரியாமல் நமது நண்பர்கள் போய் அவன் வீட்டில் வெடி போட்டதும் ( வெடி போடும் வரை பார்த்துக்கொண்டு இருந்தான்) 3 மேசைக்கத்திகளினால் நண்பர்களை குறி பார்த்து எறிய வெளிக்கிட்டான் குப்பன். நண்பர்கள் உயிர் தப்பினா போதும் என்று ஒரே ஓட்டம். அதில் மயிரிழையில் ஓடித்தப்பினவர் தான் நமது நண்பன் ரொட்டி. இப்பிடியாக கத்து எறிவதிலும் வல்லவன் குப்பன்.குப்பனுடைய இன்னும் பல சாதனைகளுடனும் நமது ஏனைய நண்பர்களினதும் சாதனைகளுடனும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.

1 பின்னூட்டங்கள்:

ரூபன் said...

குப்புசாமி பற்றி சொல்லுறதென்று ஏன்டா நீ முட்டாள் ஆன கதயெல்லாம் எழுதுகிறாய்.
இது உனக்கு தேவயாடா

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com