நான் சிவராம சர்மா....

நான் சிவராம சர்மா. ஜோசி எண்ட பெயரை மறந்தவைக்கு அல்லது தெரியாதவைக்காக சொல்லுறன். யாழ்.இந்துவில படிக்கேக்க ஜோசி எண்டு ஒரு புனை பெயர் வச்சுக்கொண்டு திரிஞ்சதால அப்பிடித்தான் என்னை கூப்பிட்டாங்கள். இப்பவும் கொழும்பில ஆராவது என்னை ஜோசி எண்டு கூப்பிட்டா அது கட்டாயம் என்ட பள்ளிக்கூட பெடியங்களாத்தான் இருக்கும்.நான் இண்டைக்கு தான் இந்த பதிவில இணையிறன். நேற்றுத்தான் முதல்முதலா பாத்தன். சரியான சந்தோசமா இருந்தது. நான் கொழும்புக்கு வந்ததோட கன காலம் ஒருத்தரோடயும் தொடர்பில இல்லாம போனன். சஞ்ஜே எல்லாம் என்னோட ஒரே ஊரில இருந்து ஒண்டா பள்ளிக்கூடம் போறனாங்கள். இங்கால வந்த பிறகு இப்பதான் அவனைப்பத்தி இதில பாத்தன். இப்ப இதில சேர்ந்து உங்கட பதிவுகளை பாக்க சரியான சந்தோசமாயும் பெருமையாயும் இருக்கு. என்ட ஞாபகங்களை நேரம் கிடைக்கேக்க எழுதுவம் எண்டு நினைக்கிறன்.

6 பின்னூட்டங்கள்:

சஞ்யே said...

hi.........JOSI !
wellcome to JHC !
nan unodu PESI -kanakaalam
everyday VASI !

பகீ said...

வாங்க எஸ்பி. எப்பிடி இருக்கிறீங்க??

ஜோசி said...
This comment has been removed by the author.
ஜோசி said...

சஞ்ஜேட பின்னூட்டத்துக்கு நன்றி.
பகீ, நல்லா இருக்கிறன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க ஏஎஸ்பி?
கொழும்புப் பக்கம் வந்திருக்கிறீங்க. நேரில கண்டு கனகாலமாச்சு.
கூடின சீக்கிரம் சந்திக்கிறன்.

சஞ்யே said...

//வாங்க எஸ்பி. எப்பிடி இருக்கிறீங்க??//

//நீங்க எப்பிடி இருக்கிறீங்க
ஏஎஸ்பி?//

ஓ ! நீங்க ரெண்டுபேரும் அவையளோ !
அப்ப நம்ம மக்கரின் CID உமைகரன் என்ன சும்மாவா?

கனி said...

அட நம்ம ஜோசி . வாங்க பழகலாம்..

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com