வணக்கம்!
புதிய மெருகூட்டல் நன்றாக இருக்கிறது.
திறம்பட செய்திருக்கிறீர்கள் பகீ.
கல்லூரியின் நிறத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
அத்துடன் ரூபன் என்பது யார் என இனி கேட்க மாட்டேன்.
அதனை இத்துடன் விட்டுவிடுகிறேன்.
இதனால் சந்தேகம் தீர்ந்துவிட்டது என அர்த்தமில்லை.
ஆக்கபூர்வமாக, ஆரோக்கியமாக தொடர்புகளை பேணலாம் என எழுதவந்த நாங்கள், இது அவனொ அவனில்லையோ என சந்தேகங்களை கிளப்பி காலத்தை வீணடிக்க விரும்பவில்லை.
(அனால் IP முகவரியைப்பார்தது அவனது Location ஜ கண்டுபிடிப்பதற்கு பகியால் முடியும்.)
இந்த ஆள்மாறாட்டத்துக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்கும் பட்சத்தில் அது முடியாத காரியம்.
//நம்ம பத்தை இக்கு mail லே நான் தான் செக் பன்னுரனான்//
கனியின் இந்த கூற்று உண்மையென்பது எனக்கும் தெரியும்.
இதனால் எந்தவித பாதகமுமில்லை என நினைக்கலாம்.
ஆனால் இத்தகைய செயற்பாடுகள், வாசிப்போர் மத்தியில் எழுதுவோர் மீதான நம்பிக்கையீனங்களை தோற்றுவிக்கலாம். செந்தப் பெயரில் எழுதும் ஏனையோரையும் இது குறிப்பிட்ட நபரில்லாது, வெறு ஒருவர் அவர் பெயரில் எழுதுகிறாரோ? எனும் சந்தேகத்தை வாசிப்போர் மத்தியில் ஏற்படுத்தலாம்.
இது எனது கருத்து. பிழையிருப்பின் சுட்டிக்காட்டலாம்.
இந்த பதிவு உருவாக்கப்பட்டபோது,
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சிதறிப்போயிருக்கும் நண்பர்களிடையே ஓர் கருத்துப் பரிமாறல்கள் மூலம் ஓர் உறவுப்பாலத்தை கட்டியெழுப்பக்கூடிய ஓர் அரிய வாய்ப்பாகத்தான் எடுத்துக்கொண்டேன். இக் கருத்தையே "எழுதலாம் வாங்க" எனும் எனது முதலாவது ஆக்கத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இது ஏனைய பிற வாசகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கோடும், இந்துவின் மைந்தர்களை உலகுக்கு வெளிக்காட்டும் நோக்கோடும் உருவாக்கப்பட்ட பதிவென பின்னர் பின்னர் வந்த ஒரு மடலின் மூலம் அறிந்துகொண்டேன்.
//இதில் முக்கிய விடயம் என்னவெனில் நீங்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைப்பிரயோகம். எந்த காரணத்தை முன்னிட்டும் தவறான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தவேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்ளுகின்றோம். (தனிப்பட்ட ஒருவரை நோக்கி நாயே !! பரதேசியே !! என்று விழிப்பது கூட பிழையான வார்த்தை பிரயோகம் என்றே கருதவேண்டி இருக்கின்றது.) ஏனெனில் ஆரோக்கியமான சூழலொன்றினை அது தோற்றுவிக்காது.//
ஆரோக்கியமான சூழல் எங்கே பேணப்பட வேண்டும்? இது ஒன்றும் சமுகத்தை திருத்தவோ, சமூகத்துக்கு முன்னுதாரணமாக திகழவோ உருவாக்கப்பட்ட பதிவா? அன்றி இந்த பதிவின் மூலந்தான் இந்துக்கல்லூரியைப்பற்றி ஏனையோர் அறிந்து கொள்கிறாக்களா? (கல்லூரிக்கென சொந்தமாக இரு வலைத்தளங்கள் இருக்கின்றனவே.) அவ்வாறெனில் மேற்கண்ட மடலில் குறிப்பிட்டவாறு வார்த்தைப்பிரயோகங்களை கவனமாகத்தான் கையாளவேண்டும்.
ஆனால் நண்பர்களிடையே கருத்துப்பரிமாறல்களுக்கும், பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்க எனவும் உருவாக்கப்பட்டுள்ளதாக நான் கருதிய பதிவு ஒன்றில் நான் அத்தகைய வார்ததைப்பிரயோகம் ஒனறை பயன்படுத்தியது தவறென கருதவில்லை.
ஏனெனில் எனது நண்பனொருவனை உரிமையுடன் திட்டுவதற்கு வெளியுலக வாசகர்கள் தடையாயிருப்பதை நான் விரும்பவில்லை.
ஏனைய வாசகர்கள் இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லையே. அவர்கள் விளங்கிக்கொள்வார்கள் இது கல்லூரி நண்பர்கள் தமது கடந்த காலங்களை அசைபோடுகிறார்கள். இதில் நண்பர்களிடையே இத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் சகஜம் தானே என உணரக்கூடியவர்கள் அவர்கள். (மிகவும் மோசமான , கீழ்த்தரமான வார்ததைப் பிரயோகங்கள் கூடாதுதான்.)
இந்தப் பதிவை பகீ உருவாக்கியபோது மிகவும் ஆர்வமாக எழுதவந்தவர்களில் நானும் ஒருவன்.
அதுவரை காலமும் சொந்தப்பெயரில் எழுதாது வேறு பெயரில் வலைப்பதில் எழுதிக் கொண்டிருந்த நான், (நாட்டுச் சூழல் காரணமாக அது எந்தப் பதிவென்று இங்கே குறிப்பிட முடியாது. சிலர் தனிப்பட்ட முறையில் அறிந்துள்ளார்கள்) இந்தப் பதிவில் சொந்த பெயரில் எழுத வேண்டும் எனும் காரணத்துக்காகவே சஞ்சாரம் எனும் பதிவை உடனடியாக உருவாக்கி சொந்த பெயரில் எழுத ஆரம்பித்தேன்.
என்னைப் போலவே ஒவ்வொருவரும் ஆர்வத்தோடுதான் இதில் பங்களிப்பு செய்கிறோம்.
எங்கள் எல்லோரையும்விட இந்த பதிவை உருவாக்கி எங்களுக்கெல்லாம் ஒரு களத்தை உருவாக்கித் தந்த பகீ என்றைக்கும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவனே.
ஆனால் அவன் உருவாக்கிய இந்த கூட்டுக்குள் நான் குழப்பத்தை உண்டுபண்ணுகிறேன் என யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். அல்லது எனது பின்னூட்டமொன்று அழிக்கப்பட் ஆதங்கத்தில் கத்துகிறேன் என நினைக்கவேண்டும்.
இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. எனக்கு பிடிக்காத ஒரு விடயத்தை நான் சுட்டிக்காடடுவதில் தவறில்லை என நினைக்கிறேன்.
எனவே எனது கருத்துக்களை நான் கூறியுள்ளேன். தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பின்குறிப்பு: பகீ இந்த இடுக்கை நீண்ட நாட்களுக்கு இந்தப் பதிவிலிருப்பது பொருத்தமாக இருக்காதென நினைக்கிறேன். எனவே எழுதும் ஏனையோரின் கருத்துக்கள் பகிரப்பட்டதும், இதனை பதிவிலிருந்து அகற்றிவிடவும்.
வருந்துகிறேன் !
Subscribe to:
Post Comments (Atom)
நம்மளைப்பத்தி
இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com
2003jhc at gmail dot com
9 பின்னூட்டங்கள்:
ஹாய் சஞ்சே, உனது மடலுக்கு நன்றி. விட்டுத்தள்ளுடா .இதெல்லாம் ஒரு பிரச்சினையென்று ஏனடா ?? நாங்க தூர இருக்கும் பழைய நண்பர்களுடன் மீண்டும் ஒரு உறவுப் பாலத்தை ஏற்படுத்தவே இதை இயக்கியுள்ளோம். தவறான வார்த்தைப் பிரயோகத்தினால் மற்றவரின் மனம் நோகடிக்கப்பட்டு அவர் எம்மோடு தொடர்புகளை துண்டிக்கும் நிலை வரலாம் என்பதற்காகவே மின்னஞ்சல் மடல் வரையப்பட்டிருந்தது. எனவே இவ்விடயத்தை மேலும் பெரிதுபடுத்தாமல் எமது சக நண்பர்களின் சந்தோசங்களோடும் கற்பனைகளோடும் உன்னையும் இணைத்துக் கொள்வாய் என நம்புகின்றேன்
இது என்னங்கடா வம்பா போயிச்சு. ஊரில பேச்சுக்கு பேசுரதை எல்லாம் பிரச்சனை ஆக்கினா ஊரு தாங்காதுடா. நான் பெரியவன் சொன்னா கேலுன்கல். கல்லூரியிலும் சண்டை அது முடிய இங்கயும் சண்டையா? நான் அங்க இல்லாதது இப்போஎல்லோரும் நாட்டாமை வேலை பார்க்கிரான்க. தீலீபன் உன்னை தான்.( என் முதுகு இப்போ தப்பிச்சு ) சும்மா சும்மா ! ரூபன் நீ எங்க இருக்க? இங்க உனக்காக ஒரு பூகம்பமே வெடிக்க போகுது.
வணக்கம் சஞ்யே,
அப்ப உனக்கும் புது அடைப்பலகை பிடிச்சிருக்கு. நன்றி.
முதலில ரூபன் விசயம். இதில பெரிசா இனி நான் சொல்லுறதுக்கு ஒண்டுமில்லை. முதலில உமைகரன் அவனோட கதைச்சு உறுதிப்படுத்தினவன். நானும் ஒரு மின்னஞ்சல் போட்டனான். பிறகு இண்டைக்கு அவனுக்கு ஒரு கோல் போட்டு கதைச்சதில அவன்தான் அது எண்டுறது என்னைப்பொறுத்தவரை உறுதியாகி இருக்கு. இண்டைக்கு அவன் உனக்கு ஒரு கோல் எடுப்பான் எண்டு நினைக்கிறன்.
//////////
//நம்ம பத்தை இக்கு mail லே நான் தான் செக் பன்னுரனான்//
கனியின் இந்த கூற்று உண்மையென்பது எனக்கும் தெரியும்.//////////
நெடுகலும் இப்பிடி இருக்கோணும் எண்டு இல்லைதானே..
என்னைப்பொறுத்தவரையில் நன்மதிப்பை பெறுதல் என்பது ஒருபுறம் இருக்க மதிப்பற்று போதல் என்பது இருக்கக்கூடாது என்பதே அந்த மடலின்நோக்கமாக இருந்தது. ஆரோக்கியமான சூழல் என்பது மற்றவர்களை திருத்துவதற்காகவோ அல்லது மற்றவர்களுக்கு முன்னுதாரணமான இடங்களில் மட்டுமேதான் இருக்கவேண்டும் என்று நான் கருதவில்லை. அதானால்தான் ஆரோக்கியமான ஒரு சூழலுக்கு அது நல்லதல்ல என்ற வாக்கியம் அங்கு இடம்பெற்றது. பொதுவாக நாங்கள் இருக்கின்ற எந்த சூழலும் அரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்று விரும்புவது தவறல்லவே?? (முக்கியமான விடயம் என்னவெனில் எனது கருத்துக்கள் பூரணமாக சரியானவை என நான் கூறுவதற்கில்லை .)
இருந்தாலும் உரிமையோடு திட்டுதல் என்பது மற்றவரை புண்படுத்தி விடக்கூடாது என்பது தான் எனது நோக்கமாக இருந்ததே தவிர வேறொன்றும் இல்லை. இந்த எனது விளங்குதல் பூரணமாக சரியானது என வாதாட நான் தயாராக இல்லை. ஏனெனில் நிச்சயமாக அதில் பிழைகள் இருக்கலாம்.ஆனால் அழிக்கப்பட்ட பின்னூட்டம் முதலில் எனது கண்ணில் பட்டபோது நான் நிச்சயமாக ஆக Nerves உணர்ந்தேன் என்பது உண்மை. அதில் இருந்த வார்த்தை பிரயோகங்கள் தவறானவைதான் என்பது இன்னமும் என் எண்ணம். இதில் தவறிருப்பின் நிச்சயம் பதிலளிக்கவேண்டும்.
இங்கு இந்த உனது பதிவால் குழப்பம் உண்டு பண்ணுதல் எனும் எண்ணத்திற்கே என்னைப்பொறுத்தவரை இடமில்லை. அத்தோடு இப்பதிவு தொடர்ச்சியாக இங்கு இருத்தல் நிச்சயமாக பல நல்ல விடயங்களை ஏற்படுத்தும் என நான் நினைக்கின்றேன். நிச்சயமாக அழிக்கத்தான் வேண்டும் என்றால் ஒரு பின்னூட்டம் இட்டுவிடு.
வெறென்ன இப்போதைக்கு அவ்வளவுதான்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான வலைப்பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ஆமா பெரியவரு சொல்லுறாரு கேளுங்க. அப்புறமா காக்கா கண்ணை குத்தும்.....
திலீபன் சந்தோசங்களுடனும் கற்பனைகளோடும் மட்டுமல்லாமல் கருத்துகளோடும் கவலைகளோடும் என்று எல்லாவற்றோடும் இணைந்தால் தான் உண்மையான சந்தோசம் ஏற்படும் எனபது என் எண்ணம். விட்டுத்தள்ளாமல் சஞ்யே (சஞ்சயா சஞ்யே வா உண்மைய சொல்லு. - இங்கிலீசுக்காரன் ஆகப்பாக்கத) கேட்டதுதான் நல்லம் எண்டு நான் நினைக்கிறன். நீ என்ன நினைக்கறாய்.
இதுக்கு நீ பதில் சொல்லோணும் எண்டு ஒண்டும் கட்டாயமில்லை. நேர வந்து முதுகில குத்தாம இருந்தா சரி.
வணக்கம் பகீ, திலீபன், கனி !
கருத்துக்களுக்கு நன்றி.
அடுத்தவர்கள் கூறுவதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்கு என்றைக்கும் கிடையாது. எனது கருத்துக்களை அப்பட்டமாக தெரிவித்துவிடுவேன். இங்கேயும் அவ்வாறுதான். தெரிவித்தேன். தெளியவைத்தீர்கள்.
//கல்லூரியிலும் சண்டை அது முடிய இங்கயும் சண்டையா?//
சண்டை பிடிப்பது எனது குணமாக இருக்கலாம். ஆனால் நண்பர்களுடன் சண்டை பிடிப்பவனல்ல. நண்பர்களுக்காக கல்லூரி நிர்வாகத்திடமும், கல்லூரிக்காக குடாநாட்டு பத்திரிகைகளுடனும் தான் கல்லூரிக்காலத்தில் சண்டைபிடித்திருக்கிறேன்.
அதிருக்கட்டும், நான் எழுப்பிய சந்தேகங்களுக்கும், முரண் கருத்துக்களுக்கும் பொறுமையாக பதிலளித்து விளக்கமளித்த அனைவருக்கும் நன்றி.
இத்துடன் இது எமக்கேயுரிய கருத்து பரிமாறல் களம். எனவே இங்கே இத்தகைய விவாதங்கள் இருப்பது எமக்கிடையேயான பிணைப்பினை மேலும் வலுப்படுத்தும் என நினைக்கிறேன்.
அத்துடன் இங்கே வெள்ளவத்தை நண்பர்கள் யாருமே, பத்தைதான் எழுதுவது என்பதை நம்ப மறுத்து நான்தான் பத்தையின் பெயரில் எழுதுவதாக என்னை ரொம்பவும் கடித்தார்கள். அவனைப்பற்றி தெளியவைக்குமாறு நான் கோரியதற்கு இதுவும் ஓர் காரணம்.
//அதில் இருந்த வார்த்தை பிரயோகங்கள் தவறானவைதான் என்பது இன்னமும் என் எண்ணம்.//
எனது அந்ந பின்னூட்டம் தவறானதென்பதை நானும் பரிபூரணமாக ஏற்றுக்கொள்கிறேன்.
அத்துடன் இந்த இடுக்கை நிச்சயம் அழிக்கப்பட வேண்டும் என நான் கூறவில்லை. இந்தப் பதிவில் தொடர்ந்தும் இருப்பது ஆரோக்கியமாக இருக்காதென நினைக்கிறேன்.
பின்குறிப்பு:
sanjey (சஞ்ஜெய்) இதுதான் இது ஆங்கில உச்சிப்பு.
திலீபன் நீ எப்படி எண்டாலும் கூப்பிடடா!.
அவனுக்கு முதுகில இரண்டு போட்டுவிடு.
அனைத்து யாழ் இந்துவின் மைந்தர்களே . . .
COME BACK TO NORMAL
சஞ்யே, அவனுக்கு முதுகில போட்டா எத்தனை பேருக்கடா (??) நான் பதில் சொல்ல வேண்டி வரும். கனி சந்தோசப்படாத இன்ரபோலை வச்சு உன் பென்டை நிமித்துவன்... கவனம்.
சஞேய் உன்னுடய சந்தேகம் நியயமானதுதான், நான் உன்னுடன் கதைத்து முழுவதும் உனக்கு விளங்கப்படுத்திய பிற்கும் நீ அடம் பிடிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.. அத்துடன் நான் தொடர்பு கொள்ளமுடியாத இடதில் இல்லை. எதாவது சந்தேகம் என்றால் நேரடியக என்னுடன் கதை.
//நம்ம பத்தை இக்கு mail லே நான் தான் செக் பன்னுரனான்//
இந்த கூற்று உண்மை நான் மறுக்கவில்லை ஆரம்பகாலதில் என்னுடய mail ஜ கனி தான் பரிசோதிக்கிறவன் அது மறுப்பதற்கில்லை,, ஆனால் அதற்காக எனக்கு mail பர்க்கத்தெரியது என்று அர்த்தமில்லை,,, அதை முதலில் விளங்கிக்கொள்,,,, யாவரும் நண்பர்களே இங்கு பதிவுகள் முக்கியம்,,, நாம் தொடர்பில் இருக்கும்போது அதை பற்றி நீ ஏன் அலட்டிகொள்கின்றாய் என்று புரியவில்லை,,, நமக்குள் ஏன் இந்த குழப்பம்,,,,,,,,,,,
Post a Comment