நண்பர்களின் கின்னஸ் சாதனைகள் - பாகம் 1

வணக்கம் நண்பர்களே !

நமது பெடியன்களால் செய்யப்பட்ட சாதனைகள் கொஞ்சம் இருக்கு, அதுகள் நமது நண்பர்களின் நட்பின் உலக அதிசயமாக போற்றப்படுபவை, அவற்றை கின்னஸ் புத்தகத்தில் பதிய சிபார்சு செய்துள்ளோம், வெகுவிரைவில் பதியப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம், இதை நினைத்து நாங்கள் எல்லோரும் பெருமைபடவேண்டும். அந்த சாதனைகளை சாதனையாளர்களின் பெயர் விபரங்களுடன் உங்களின் பார்வைக்கு சிலவற்றை தருகின்றோம்.

நன்றி

கின்னஸ் சிபார்சுக்குழு - jhc 2003
  • தலைமயிர் வெட்டினதும் மாசத்தில ஒருதரமாவது குளிப்பதும் ---- பகி
  • முதல்முறை பிளென்ல போனதும் பலவருடங்களாக தனது குடும்ப சின்னமான டீ- சேர்டை போடுவதும் வாழ்க்கையில் ஒருதரமாவது தனது வீட்டில் பிறந்தநாள் சாப்பாடு ( அதுவும் வீடு குடிபோனதுக்கு) போட்டதும் சலூன்ல கதைத்ததும் அவர்களை தேடிபோய் அலுப்புகொடுப்பதும் ------தோசை
  • கொழும்பு வந்ததும் 5 ரூபாவுக்கு சாப்பிட்டாலும் கணக்கு பன்னி சாப்பிடுவதும் டெனிம் ரவுசர் போட்டதும் - கமல்
  • பிசினஸ் பெடியன் ஆனது - உமை
  • இதில பின்னூட்டங்கள் எழுதுவதும் clean and clear உம் fair and handsome உம் oc போடுவதும் (வெள்ளையாக வருவதுக்கு ) - பத்தை
  • டெனிம் போட்டு சைட் அடிச்சதும் பார்ட்டி ஒழுங்கு பன்னுவதும் - கந்தா
  • கொழும்பு வந்தும் தனது பாரம்பரிய martin சேர்ட்டை விடாததும் மொட்டை அடித்ததும் - விஜித்
  • இதுவரை சேவு பண்னாம இருப்பதும் காதலியிடம் காதலை சொல்லுவதுக்கு பதிலாக மாறி காதலியின் நண்பியிடம் காதலை சொன்னதும் ரீ சேர்ட் போடுவதும்(வயசை குறைத்து காட்டுவதுக்கு) - ராசா
  • பட்டாசு விட்டு கை கழன்டு போனதும் சாரம் கட்டதெரியாததும் - சுகந்தன்
  • 1 1/2லீற்றர் மோரை வாய் எடுக்காம குடித்ததும் தோசையின் அப்பரிடம் அகப்படாம சுகந்தனை காப்பாத்தினதும் - கேமபாலன்
  • 4 கொத்துரொட்டியை 10 நிமிசத்தில சாப்பிட்டதும் வி.சி.டி கட்டரை மழையில் கொண்டுவந்ததும் - ரவி
  • ஒழுங்காக காசு எல்லோரிடமும் வாங்கி பந்து வாங்குவது- சுகிந்தன்
  • எல்லோர் முதுகையும் பதம் பார்ப்பது - திலீபன்
  • சயிலை விட்டது ( சயிக்கிள்) - G.P
  • பல்லு டாக்குத்தருக்கு படித்தும் பல்லு தீட்டாம சாப்பிடுவது - முத்தன் ( இந்திரகுமார் )
  • வாள் எடுப்பதை நிறுத்தினது - உமா

பாகம் 2 வெகுவிரைவில்

4 பின்னூட்டங்கள்:

பகீ said...

////சயிலை விட்டது ( சயிக்கிள்) - G.P///

சூப்பர்

மங்களூர் சிவா said...

சூப்பருங்கண்ணா

கலக்கீட்டீங்க போங்க.

அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க.

டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு. எங்கிருந்து புடிச்சீங்க. லிங்க் கொஞ்சம் சொன்னா சந்தோசப்படுவேன்.

நன்றி

மங்களூர் சிவா

மாயா said...

அது சரி உங்கட சாதனையை எப்ப எழுதப்போறியள் ?

பிரசாத் said...

வணக்கம் கதா கனி ...... "நண்பர்களின் கின்னஸ் சாதனைகள் - பாகம் 1" வெளியிட்டாச்சு..........

"நண்பர்களின் கின்னஸ் சாதனைகள் - பாகம் 2" வெளியிடும் நேரத்தில் (அதாவது டயிப்பு அடிக்கிற நேரம்) உங்கட சக மாணவர்களோட குறிப்பா பெண் மாணவர்களோட (ஏனெண்டால் நம்ம கதா கன்னி ராசியாம்) ஒண்டா எல்லா இடத்திலையும் சுத்தி பார்த்து (கூகிலில் தேடி) படிக்க தேவையானவற்றை எடுக்கலாம் தானே???


"நண்பர்களின் கின்னஸ் சாதனைகள் - பாகம் 2" எதிர்பார்க்கப் படுகிறது............


votes 1000000000000000000000000009

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com