காதல் இல்லாமல் நாம் வாழ்வதும் வாழ்வா.............!
காதலர்தின நல்வாழ்த்துக்கள்
காதல் இல்லாமல் நாம் வாழ்வதும் வாழ்வா.............!
எழுதியது
கனி
at
0
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
பிறந்தநாள் வாழ்த்துகள்.
F.G.பத்மரூபன் (12/01/2009)இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
எழுதியது
பாலன்(P.K.P)
at
2
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..........
11/11/2008 அன்று SHEFFIELD CITY HALL இல் இடம்பெற்ற Sheffield Hallam University இன் பட்டமளிப்பு விழாவில் Bachelor of Science Information Technology(Software Engineering) பட்டம் பெற்ற எமது நண்பர்கள் சஞ்யே,பிரகாஷ்,ஜனகன் ஆகியோருக்கு JHC2003 இன் வாழ்துக்கள். இவர்கள் மென்மேலும் வாழ்வில் பல சிறப்புக்களை அடைய எங்கள் கல்லூரி ஞான வைரவர் அருள் புரிவாராக..
அத்துடன் இங்கே நண்பர்களின் பட்டமளிப்பு விழாவில் நண்பர் நிஷாந்தனும் கலந்து கொண்டுள்ளார்.
(நிழற்பட உதவி நன்றி நிஷாந்தன்)
எழுதியது
பாலன்(P.K.P)
at
2
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
டினோஜனின் பிறந்தநாள்

நமது நண்பன், கம்பராமாயண புகழ் வளர்க்கும் வித்தகர், " வாங்க பழகலாம் வாங்க பழகலாம் என்று தேடிச்சென்று அலுப்புக்கொடுக்கும் கலட்டி அம்மன் தொண்டர், எங்கள் அருமைத்தம்பி டினோஜன் அவர்கள் தனது 23 ஆவது பிறந்தநாளினை லண்டனில் ( இதை மட்டும் வடிவாக எழுதசொன்னான். டினோஜன் சரி தானே, உன் ஆசை நிறைவேறிச்சா.....) 08/11/2008 அன்று வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இவரை JHC 2003 சார்பாக நாமும் வாழ்த்துவதில் அகமகிழ்கின்றோம்.
எழுதியது
கனி
at
1 பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
(21.10.2008) கனிக்கு பிறந்த நாளு டோய்!



(21.10.2008) பிறந்த நாள் காணும் அருமை அண்ணன் - சூப்பர் ஸ்டாரின் தம்பி
பத்திரிகையுலக சக்கரவர்த்தி - வலைப்பதிவு வித்தகர் - சைதைச் சுனாமி - பாசக்கிளி - எழுத்துலக எஜமான் -நரம்படி மன்னர்- உயர்திரு - உயர்உயர்திரு. கனி என்ற சூப்பர் ஸ்டார் தம்பிக்கு - யாழ்ப்பாணம் வாழ் - Colombo வாழ் - SriLanka வாழ் - உலக வாழ் மலரும் நினைவுகள்சார்பாக எங்களின் மனமார்ந்த - இதயப் பூர்வமான - உளம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாசநெஞ்சன் அண்ணன் கனி அவர்கள் (21.10.2008) இரவு - 8 மணி அளவில் - Landon கிண்டி - லீ ராயல் மெரிடியனில் - அன்னதானம் வழங்குவார்.
யாழ்ப்பாண.Colombo நண்பர்களுக்கு கனி வீட்டில்-அன்னதானம் வழங்குவார்.
பின் குறிப்பு : அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
எழுதியது
உமைகரன்
at
3
பின்னூட்டங்கள்
வகை: கடி, வாழ்த்துகின்றோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சஞ்யே 13.09.2008 இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
"வாழ்க வளமுடன்"
எழுதியது
பாலன்(P.K.P)
at
6
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
19.08.2008 அன்று BMICH இல் இடம்பெற்ற BCAS CITY CAMPUS இன் பட்டமளிப்பு விழாவில் Quntity Serveying இல்Higher National Diploma பட்டம் பெற்ற எமது நண்பர்கள் பிராதப்,சுகிந்தன், டினோஜன் ஆகியோருக்கு JHC2003 இன் வாழ்த்துகள். இவர்கள் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய எங்கள் கல்லூரி ஞான வைரவர் அருள் புரிவாராக.
எழுதியது
பாலன்(P.K.P)
at
2
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
திலீபனுக்கு இன்று பிறந்தநாள்........
எல்லோராலும் செல்லமாக நாய் தில்லி என அழைக்கப்படும் நமது நண்பன் திலீபன் அவர்கள் தனது 24 ஆவது பிறந்தநாளை வெகுவிமர்சையாக 29.08.2008 இன்று கொண்டாடுகின்றார்.இவரை நமது JHC 2003 சார்பாகவும் நமது நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்தி இவரது பன்றிக்கோட்டு பிள்ளையாருக்கான தொண்டுசேவை நீடிக்கவும் எல்லாம் வல்ல கொக்குவில் மஞ்சவனப்பதி முருகனை பிரார்த்திக்கின்றோம்.
பி.கு : இவரது பிறந்தநாளினை முன்னிட்டு நண்பன் தயிர் அவர்கள் ஒழுங்குசெய்துள்ள பீசா பார்ட்டிக்காக நமது நண்பர்கள் அனைவரும் தெகிவளை பீசா சென்ரரில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலதிக தகல்களுக்கு நண்பன் தயிரை தொடர்பு கொள்ளவும்.
எழுதியது
கனி
at
5
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சு.பா.........
நமது நண்பன் சு.பா (விஜித்) அவர்கள் தனது 24 ஆவது பிறந்தநாளினை 29.08.2008 அன்று கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.அவரை JHC 2003 சார்பாகவும் நமது நண்பர்கள் சார்பாகவும் வாழ்துகின்றோம். இவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றிய தகவல்களை நமது JHC 2003 கொழும்பு செய்தியாளர் நண்பன் கமல் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
எழுதியது
கனி
at
3
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
.............பிறந்த நாள்...............
சிறந்த தொப்பி(hap collection) சேகரிப்பு நிபுணரும்... STAR.மென்பந்து விளையாட்டு கழக தலைவரும்.. சிறந்த 3 குச்சிகாப்பாளரும்(wicket kepper)... சிறந்த சுழட்டிபந்து வீச்சாளரும் அதிசிறந்த பந்துதடுப்பட்ட(துடுப்பாட்டமானால் பந்தை அடிக்கவேணும்.....)வீரரும் அத்துடன் சிறந்த நடுவரும்(..............?)
STAR கழகத்தின் சார்பாக பலப்பல வெற்றி"" மென்பந்துகளின்"" வெற்றிக்கு கரணமான எங்கள் சிங்கம்... அண்ணன் சுகிந்தன் தனது 24 வது பிறந்ததினத்தை 14.07 இல் டுபாயில் சிறப்பாக கொண்டாடுகின்றார்... மேன்மேலும் பல வெற்றிகளை குவிக்க வேம்படி பிள்ளையார் அருள்பாலிப்பாராக...........
எழுதியது
கமலகரன்
at
4
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
வாழ்த்துகிறோம் !
8.7.2008 அன்று இடம்பெற்ற இன் பட்டமளிப்பு விழாவில், B.Sc(Hons)பட்டம் பெற்ற நண்பன் நிசாந்தனை வாழ்த்துவதுடன், அவர் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய கல்லூரி அன்னையின் அருளை வேண்டி நிற்கிறேன்.
2003ம் ஆண்டு Batch இலேயே முதல் Degree பெற்றவர் எனும் பெருமைக்குரியவரான. ஐனேந்திரன் அவர்கள் தனது இரண்டாவது Degree ஆன M.SC பட்டத்தை அதே தினத்தில் பெற்றுள்ளார்,இவர் மேலும் வாழ்வில் ஏற்றமடைய கல்லூரி அன்னை அருள் புரிவாளாக.
எழுதியது
சஞ்யே
at
1 பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
இலண்டன் பயணமாகிறார் நிஷாந்தன்
எமது நண்பர் க.நிஷாந்தன் 03/07/2008 இலண்டன் பயணமாகிறார் .அவர் 08/07/2008 அன்று Middlesex University, London இல் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறவுள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் இலண்டனில் உள்ள எமது நண்பர் ஜனேந்திரனும் பட்டம் பெறவுள்ளார்.இவர்கள் இருவருக்கும் JHC2003 இன் வாழ்த்துக்கள்.மற்றும் நண்பர் நிஷாந்தனின் பார்ட்டியில் கலந்து கொண்ட எங்கள் நண்பர்களின் புகைப்படங்களும் நண்பர் நிஷாந்தன் புடவை கொள்வனவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் மற்றும் நண்பர் கந்தாவிற்கு புடவைகளை ரூபன்,கமல் கொள்வனவு செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும்............
எழுதியது
பாலன்(P.K.P)
at
2
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
நிசாந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

"அன்னையின் பிள்ளையாய்
அறுசுவையின் மன்னனாய்
ஆற்றல் பல பெற்று
ஈகை குணத்துடன்
உவகை என்றும் நிலைத்து
ஊருக்கு நல்லது செய்து
என்றும் வாழ்வினிலே
ஏற்றம் பல பெற்று
ஐயம் (மற்றவர்களுடைய) களைந்து
ஒருத்தியை திருமணம் செய்து
ஓருயிர் ஈருடலாய்
ஔடதம் தேவையே இல்லாமல்
என்றும் வாழ்வாங்கு வாழ
மனதார வாழ்த்துகிறேன்".
"கைப்பேசியில் சொல்ல
நினைத்த வாழ்த்தை
கரங்கள் உள்வாங்கி
எழுத்தாணியால்
எழுதியது
கவிதையானது..
குறிப்பு: "ஒவ்வொரு பிறந்த நாளிலும் வயதோடு, அழகையும் ஏற்றிக் கொள்கிறாய்!"
எழுதியது
சஞ்யே
at
3
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
பிறந்தநாள் வாழ்த்துகள்
க.நிஷாந்தன் (27/06/2008)இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
வள்ளல் கொடுத்தால்தான் கொடை உண்மைதான் -ஆயினும் வார்தையால்
அணைத்தாலும் அது கொடைதானே
இல்லை உனக்குவோர் பரிசு உண்மைதான் -ஆயினும் இதயத்தால்
ஏந்திவிட்டால் அது பரிசுதானே
நல்லோர்கள் புடைசூழ நாற்திசையும் தமிழ்மணக்க நடைபோடு
நடைபோடு நல்லதமிழ் மகனாக
சொல்லில்லை சொல்லில்லை நெஞ்சத்தின் கவிசொல்ல சொல்லாமல்
போனாலும் சுவையன்றோ நட்புறவில்
உள்ளத்தின் உணர்வுகளை ஒருமுகமாய்க் குவிக்கின்றேன் ஓவியமாய்க்
காவியமாய் வாழ்வாங்கு வாழ்கவாழ்க
ஆயுளென்று நூறிருந்தால் அதுவொன்றே பெரும்பேறு அடடாவோ
நீயதிலே காவாசி வென்றுவிட்டாய்
வாயாரப் புகழ்ந்தாலும் விடுபட்டுப் போகுதடா வற்றாத
புகழோடு எந்நாளும் வாழ்கவாழ்க
நோயற்ற வாழ்வோடும் நொடிதவறா சிரிப்போடும் நயாகனாய்
பொழிவாக நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க
என்றும் அன்புடன்
என் இதய வாழ்த்து
எழுதியது
பாலன்(P.K.P)
at
4
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
பிறந்தநாள் வாழ்த்துகள்.
சிறிசங்கர் (08/06/2008)இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு அவரின் சாந்தையர் மடப் பிள்ளையார் அருள் புரிவாராக....
எழுதியது
பாலன்(P.K.P)
at
8
பின்னூட்டங்கள்
வகை: வாழ்த்துகின்றோம்
நம்மளைப்பத்தி
2003jhc at gmail dot com










