
குரங்கின் கையில் பூமாலை

எழுதியது
கனி
at
0
பின்னூட்டங்கள்
வகை: கடி
குப்புசாமியின் நம்பமுடியாத சாதனைகள்.......பாகம் 1
1. ஈக்கு வாணம் விட்டு கை உடைந்தது
நான் நினைகின்றேன் அது ஒரு பள்ளி சாதாரண தர பரீட்சை நெருங்கும் காலம், அப்போது நானும் பாலனும் குப்புசாமியும்(சுகந்தமாறன்) combined study என்று எங்க வீட்டில் அரட்டை அடித்த நேரம். சரியாக கிறிஸ்மஸ்க்கு இரண்டு நாட்கள் முந்தி இப்படியாக நாங்கள் மூன்றுபேரும் படித்துக்கொண்டு இருக்கிறப்போ பாலன் நான் வாங்கி வைத்த ஈக்குவாணத்தை கண்டுட்டான், அது கிறிஸ்மஸ்க்காக வாங்கினது.அதைப்பார்த்த பாலனுக்கு இருப்பு கொள்ளவில்லை.அதைவைத்து ஏதாவது செய்யணும் என்று துடித்தபோது எந்த விசயத்தையும் பிளான் பண்ணி செய்வதில் வல்ல நமது குப்புசாமியின் மூளையில் ஒரு பொறி தட்டியது.அந்த ஈக்குவாணத்தை நம்ம தயிர் ( உமைகரன்) வீட்டுக்கு மேல கொண்டுபோய் விடணும் என்னு சொன்னான். சரியாக நடுஇரவு 12 மணிக்கு பாலனும் குப்பனும் ஏதோ பெரிய தாக்குதலுக்கு போற கெட்-டப் உடன் ஈக்குவாணத்தை எடுத்துக்கொண்டு எங்க வீட்டு படலையினையும் ஏறித்தாண்டி வெளியில் போய்ட்டாங்க. நானும் இவர்களை விட்டுட்டு வீட்டில் இருந்தேன். திடிரென எனது வீட்டுக்கு மேல ஈக்குவாணம் செல்லும் ஒளி தெரிந்தது. இந்த இரண்டு கழுதைகளும் என்னிடமே ஈக்குவாணம் வாங்கு அதை என் வீட்டிலயே விட்டு என்னை முட்டாள் ஆக்கிட்டாங்க. சற்று நேரத்தில் குப்பனும் பாலனும் வந்தார்கள்.அப்போ குப்பன் கையை பிடிச்சுக்கொண்டு வந்தான், என்ன என்று கேட்டபோது ஈக்குவாணம் விட்ட விசையில் கை மூட்டு கழண்டுபோட்டுதாம். நாங்க எல்லாரும் சிரித்த போது அவன் சொன்னான், டேய் முட்டாள் பசங்களா நீங்கள் நீயுட்டனின் 3ம் விதி படிச்சது இல்லையா, போய் படிச்சிட்டு வாங்க பிறகு நம்புவீர்கள் என்றான், இப்பகூட நீங்கள் கேட்டாலும் இதையே சொல்லுவான். இந்த உலகத்திலே ஈக்குவாணம் விட்டு கை கழண்ட ஒரே ஒருத்தன் நம்ம குப்புசாமி தான்.
கிறிஸ்மஸ் காலங்களில் நமது நண்பர்கள் கைகளில் பட்டாசுகளுக்கு குறைவிருக்காது. அந்த பட்டாசுகளை நமது நண்பர்களின் வீடுகளில் எறிந்துவிட்டு ஓடிமறைவதில் ஒரு இன்பம்.இதில் நமது குப்பன் தான் வல்லவன்.( குப்பனும் பாலனும் தோசைவீட்டில் மூலை வெடி எறிந்து தோசையின் அப்பா கலைக்ககலைக்க ஓடித்தப்பிய அனுபவவும் குப்பனிடம் உண்டு ).ஆனால் இயமனுக்கே இடியப்பம் தீத்தினது போல குப்பனின் வீட்டுக்கே நமது நண்பர்களினால் பட்டாசு வீசப்பட்டுவிட்டது. இது இப்பிடியாக இருக்க ஒருநாள் குப்பனின் வீட்டில் மூலைவெடி போடுவது என்று தீர்மானித்து நமது நண்பர் பட்டாளம் ஆயத்தமான போது இதை சிலர் மூலம் குப்பனின் காது அறிந்துவிட்டது. இதை அறிந்த குப்பு 3 மேசைக்கத்தி, 1 மீன்வெட்டும் அறிவாள், 1 அன்ரனா பைப் என்பவற்றை தயார்நிலையில் வைத்துக்கொண்டு மாலை 6 மணி முதல் சாப்பிடாமலும் தண்ணீர்கூட அருந்தாமலும் தனது வீட்டு படலை அருகே மறைந்திருந்தான். ஆனால் நண்பர்கள் அவ்விடம் போனதோ இரவு 10 மணியளவில். அவ்வளவு நேரமும் வீட்டார் சொல்லையும் பொருட்படுத்தாமலும் உணவினை கூட கவனிக்காமலும் தனது பிளானை சரியாக செய்வதில் விழிப்போடிருந்தான் நமது குப்பன். இது தெரியாமல் நமது நண்பர்கள் போய் அவன் வீட்டில் வெடி போட்டதும் ( வெடி போடும் வரை பார்த்துக்கொண்டு இருந்தான்) 3 மேசைக்கத்திகளினால் நண்பர்களை குறி பார்த்து எறிய வெளிக்கிட்டான் குப்பன். நண்பர்கள் உயிர் தப்பினா போதும் என்று ஒரே ஓட்டம். அதில் மயிரிழையில் ஓடித்தப்பினவர் தான் நமது நண்பன் ரொட்டி. இப்பிடியாக கத்து எறிவதிலும் வல்லவன் குப்பன்.
குப்பனுடைய இன்னும் பல சாதனைகளுடனும் நமது ஏனைய நண்பர்களினதும் சாதனைகளுடனும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.
எழுதியது
கனி
at
1 பின்னூட்டங்கள்
வகை: கடி
(21.10.2008) கனிக்கு பிறந்த நாளு டோய்!



(21.10.2008) பிறந்த நாள் காணும் அருமை அண்ணன் - சூப்பர் ஸ்டாரின் தம்பி
பத்திரிகையுலக சக்கரவர்த்தி - வலைப்பதிவு வித்தகர் - சைதைச் சுனாமி - பாசக்கிளி - எழுத்துலக எஜமான் -நரம்படி மன்னர்- உயர்திரு - உயர்உயர்திரு. கனி என்ற சூப்பர் ஸ்டார் தம்பிக்கு - யாழ்ப்பாணம் வாழ் - Colombo வாழ் - SriLanka வாழ் - உலக வாழ் மலரும் நினைவுகள்சார்பாக எங்களின் மனமார்ந்த - இதயப் பூர்வமான - உளம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாசநெஞ்சன் அண்ணன் கனி அவர்கள் (21.10.2008) இரவு - 8 மணி அளவில் - Landon கிண்டி - லீ ராயல் மெரிடியனில் - அன்னதானம் வழங்குவார்.
யாழ்ப்பாண.Colombo நண்பர்களுக்கு கனி வீட்டில்-அன்னதானம் வழங்குவார்.
பின் குறிப்பு : அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
எழுதியது
உமைகரன்
at
3
பின்னூட்டங்கள்
வகை: கடி, வாழ்த்துகின்றோம்
நல்லூரில் அன்னதானத்தில் தயிரும் தோசையும்......
நண்பர்களே இந்த பதிவின் தலைப்பை பார்த்து குழம்பிப்போயிடாதீர்கள்.நல்லூர் அன்னதானத்தில் தயிரும் தோசையும் என்பது அங்கே கொடுத்த சாப்பாடு இல்லை.நம்ம நண்பர்கள் உமையும் (தயிர்) சிறீசங்கரும் (தோசை) அன்னதானத்தில் முன்வரிசையில் அடிபட்டு கலந்துகொண்டதை உங்களுக்கு அறிவிக்கவே அந்த தலைப்பு. தற்போது இருக்கும் நாட்டு அசாதாரண சூழ்நிலையையும் பொருட்படுத்தாது நமது நண்பர்கள் தயிரும் தோசையும் வருடா வருடம் கலந்து கொள்ளும் நல்லூர் அன்னதானத்தில் இம்முறையும் கலந்து கொண்டு தமது சாதனையை உலகறிய செய்துள்ளார்கள். இவர்களை நாமும் பாராட்டுவதுடன் இவர்களின் அன்னதான சாதனை மென்மேலும் தொடர நல்லூர் முருகன் அருள் புரிவாராக.
இவர்களது அன்னதான சாதனை பன்றிக்கோட்டு பிள்ளையார் கோவிலிலும் சாந்தையர்மடம் பிள்ளையார் கோவிலிலும் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதைனையும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

எழுதியது
கனி
at
1 பின்னூட்டங்கள்
வகை: கடி
சு,பாவின் நெடுநாள் ஆசை..
நம்ம விஜித் யாராவது ஒரு பொண்ணுகூட ஊர் சுத்தணும் என்று பல நாட்களாக கனவு கண்டு அதற்கான ஆயத்த பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திகொண்டுள்ளதாக நமது கொழும்பு செய்தியாளர் கமல் தெரிவிக்கின்றார். அதற்காக சு.ப வெள்ளவத்தையில் உள்ள புடவைகடைகளில் இருக்கின்ற பொம்மைகளில் கை போட்டு பழகுவதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுதியது
கனி
at
4
பின்னூட்டங்கள்
வகை: கடி
இந்துவின் 2008 ற்கான சிறந்த புகைப்பட பிடிப்பாளர் விருது
இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.
போட்டி இறுதியில் 2008ற்கான இந்துவின் சிறந்த புகைப்பட பிடிப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது.அதில் 2003 பிரிவில் சி.பகீரதன் தட்டிச்சென்றார்.
இவரின் முயற்ச்சியை JHC2003.blogspot.com சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
புகைப்பட உதவி : சீனியின் நலன் விரும்பிகள்
பிற்குறிப்பு: இவரின் முயற்ச்சி யாதென்றால் சொந்த புகைப்பட கருவி இல்லாமலே விருதை தட்டிச் சென்றது.
எழுதியது
கமலகரன்
at
4
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம், கடி, செய்தி, வாழ்த்துகின்றோம்
கஞ்சக் கமலுக்கு பிறந்தநாள் வருகுதடா...உலக அதிசயம் நிறைவேறுமா????
எழுதியது
கனி
at
4
பின்னூட்டங்கள்
வகை: கடி
கள்ள சாமியர்கள்
புகைப்பட உதவி : தயிர்
எழுதியது
கனி
at
2
பின்னூட்டங்கள்
வகை: கடி
நிசாந்தனும் ஒரங்கொட்டானும்................... !!!!! நவீன காதல்
எழுதியது
கனி
at
4
பின்னூட்டங்கள்
வகை: கடி
தன் கையே தனக்கு உதவி........சோக வரலாறு

அந்த காலத்தில வாள் வெட்டுக்கு பெயர் போன நமது வாள் வெட்டு வெட்டி உமா இப்போ வெரும் கை உடன், என்ன கொடுமை சேர் இது..............!!!!!!!!!
எழுதியது
கனி
at
0
பின்னூட்டங்கள்
வகை: கடி
நவீன உலகின் குல்லா போட்ட முல்லாக்கள்.....................!!!!!!!!!!!!!!
இவரை பற்றி நான் சொல்ல தேவையில்லை, நீங்களாகவே தெரிந்துகொள்ளுங்கள்.
( பி. கு : இவரிடம் இருப்பது ஒன்னுமே சொந்தமில்லை...........உங்கள் சாமான்கள் ஏதாவது இவரிடம் இருந்தால் உடனே தொடர்புகொள்ளுங்கள். காரணம் : இவர் வெளிநாடு செல்ல ஆயத்தமாகின்றார்.

இவர் ஒரு சு.ப, இவர் அடிக்கடி தனது கெட்-அப்பினை மாத்துவார், ஏன் என்றால் தான் ஒரு hero என்று காட்டுவதுக்கு. உலகம் என்னதான் மாறினாலும் இவர் தனது fபுள் கை சேர்ட்டை மாத்த மாட்டார். இவரைப் பற்றி தெரிந்துகொள்ள இவருடன் மைசுர் கடைக்கு பக்கத்து கடைக்கு போறவர்களை தொடர்பு கொள்ளவும்.

இவர் ஒரு வீர தீர தமிழ் மைந்தன். இடைக்காடு குப்புசாமியான இவர் ஒரு திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். உலகத்திலே ஈக்கு வாணம் விட்டு கை கழன்ட ஒரே ஒரு மனிதன்.
எழுதியது
கனி
at
2
பின்னூட்டங்கள்
வகை: கடி
G.P குண்டனுக்கு 23 ஆச்சு................... வாழ்த்துக்கள்.... நண்பா.....!
நேற்று ( 30/10/2007) முதல் முதலாக கொழும்பில் தனது 23 ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடி மகிழ்ந்த நமது ஆருயிர் நண்பன் G.P அவர்களை நாமும் வாழ்த்துவதில் அக மகிழ்கின்றோம்.அவர் இனி சயிக்கிலுடன் (அதை விட்டுடான் ), CBZ (அதை வித்துட்டான்) அப்போ எதை தான் சொல்லுவது.......?, சரி சரி, அவர் இனி பல பஜிரோக்கள் உடன் ஊர் சுத்த எல்லாம் வல்ல கற்பக விநாயகர் அருள் புரிவாராக,
மச்சான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா.....................!

எழுதியது
கனி
at
1 பின்னூட்டங்கள்
வகை: கடி, வாழ்த்துகின்றோம்
பிரகாஸின் (கந்தா ) பிறந்ததின கொண்டாட்டங்கள்
22/ 10 / 2007 அன்று தனது 23 ஆவது பிறந்தநாளை தனது அறையில் தான் தனிய கேக் வெட்டி அதை அவனே சாப்பிட்ட நம்ம கந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் உங்களின் பார்வைக்கு.
புகைப்பட உதவி : சி.கமலகரன்
எழுதியது
கனி
at
0
பின்னூட்டங்கள்
வகை: கடி
நண்பர்களின் கின்னஸ் சாதனைகள் - பாகம் 1
நமது பெடியன்களால் செய்யப்பட்ட சாதனைகள் கொஞ்சம் இருக்கு, அதுகள் நமது நண்பர்களின் நட்பின் உலக அதிசயமாக போற்றப்படுபவை, அவற்றை கின்னஸ் புத்தகத்தில் பதிய சிபார்சு செய்துள்ளோம், வெகுவிரைவில் பதியப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம், இதை நினைத்து நாங்கள் எல்லோரும் பெருமைபடவேண்டும். அந்த சாதனைகளை சாதனையாளர்களின் பெயர் விபரங்களுடன் உங்களின் பார்வைக்கு சிலவற்றை தருகின்றோம்.
நன்றி
கின்னஸ் சிபார்சுக்குழு - jhc 2003
- தலைமயிர் வெட்டினதும் மாசத்தில ஒருதரமாவது குளிப்பதும் ---- பகி
- முதல்முறை பிளென்ல போனதும் பலவருடங்களாக தனது குடும்ப சின்னமான டீ- சேர்டை போடுவதும் வாழ்க்கையில் ஒருதரமாவது தனது வீட்டில் பிறந்தநாள் சாப்பாடு ( அதுவும் வீடு குடிபோனதுக்கு) போட்டதும் சலூன்ல கதைத்ததும் அவர்களை தேடிபோய் அலுப்புகொடுப்பதும் ------தோசை
- கொழும்பு வந்ததும் 5 ரூபாவுக்கு சாப்பிட்டாலும் கணக்கு பன்னி சாப்பிடுவதும் டெனிம் ரவுசர் போட்டதும் - கமல்
- பிசினஸ் பெடியன் ஆனது - உமை
- இதில பின்னூட்டங்கள் எழுதுவதும் clean and clear உம் fair and handsome உம் oc போடுவதும் (வெள்ளையாக வருவதுக்கு ) - பத்தை
- டெனிம் போட்டு சைட் அடிச்சதும் பார்ட்டி ஒழுங்கு பன்னுவதும் - கந்தா
- கொழும்பு வந்தும் தனது பாரம்பரிய martin சேர்ட்டை விடாததும் மொட்டை அடித்ததும் - விஜித்
- இதுவரை சேவு பண்னாம இருப்பதும் காதலியிடம் காதலை சொல்லுவதுக்கு பதிலாக மாறி காதலியின் நண்பியிடம் காதலை சொன்னதும் ரீ சேர்ட் போடுவதும்(வயசை குறைத்து காட்டுவதுக்கு) - ராசா
- பட்டாசு விட்டு கை கழன்டு போனதும் சாரம் கட்டதெரியாததும் - சுகந்தன்
- 1 1/2லீற்றர் மோரை வாய் எடுக்காம குடித்ததும் தோசையின் அப்பரிடம் அகப்படாம சுகந்தனை காப்பாத்தினதும் - கேமபாலன்
- 4 கொத்துரொட்டியை 10 நிமிசத்தில சாப்பிட்டதும் வி.சி.டி கட்டரை மழையில் கொண்டுவந்ததும் - ரவி
- ஒழுங்காக காசு எல்லோரிடமும் வாங்கி பந்து வாங்குவது- சுகிந்தன்
- எல்லோர் முதுகையும் பதம் பார்ப்பது - திலீபன்
- சயிலை விட்டது ( சயிக்கிள்) - G.P
- பல்லு டாக்குத்தருக்கு படித்தும் பல்லு தீட்டாம சாப்பிடுவது - முத்தன் ( இந்திரகுமார் )
- வாள் எடுப்பதை நிறுத்தினது - உமா
பாகம் 2 வெகுவிரைவில்
எழுதியது
கனி
at
4
பின்னூட்டங்கள்
வகை: கடி
இது யாருடையது?
தொங்கிக்கொண்டிருப்பது T-Shirt மட்டுமல்ல. ஒரு வம்சாவழியே தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு சரித்திரமிருக்கிறது.
எமது சக நண்பர் ஒருவரின் T-Shirt. அவரது அப்பா, அண்ணன்மார், தம்பி எல்லோராலும் அணியப்பட்டு சரித்திரப்புகழ் பெற்றுள்ளது.
இந்ந T-Shirt க்கு சொந்தக்காரர் விரைவில் யாழ் குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ( அவரது அண்ணாவின் திருமணத்துக்காக).
எனவே நண்பர்களே! அவர் யார் என கண்டுபிடிப்பது மட்டுமல்லாது, குடாநாட்டுநண்பர்கள் தங்களுக்கு என்னென்ன பொருட்கள் கொழும்பிலிருந்து வரவேண்டியிருக்கிறது எனும் பட்டியலையும் சேர்த்து அனுப்புங்கோ. அவர் கொண்டுவருவார்.
பின்குறிப்பு:
பகீ DHL அல்லது Fedex மூலம் ஏதாவது வெளிநாட்டிலிருந்து எடுப்பித்து கொடுத்துவிடவா?
என்ன Flavour வேணுமெண்டு சொல்லுடா.
எழுதியது
சஞ்யே
at
1 பின்னூட்டங்கள்
வகை: கடி
பொடியன்களின் பட்ட பெயர்கள்
எங்கள் பொடியன்களின் பட்ட பெயர்கள் எல்லோருக்கும் இப்ப கொஞ்சம் மறந்து இருக்கும் எண்டு நினைக்கிறன் , அதனால் எல்லோருக்கும் கொஞ்சம் அதுகளை நினைவூட்டலாம் என்று நினைக்கிறன் .
(நான் பயப்படதேவை இல்லை, இவங்கள் என்னை ஆள் வைத்தும் அடிக்க முடியாது)
பகி = சீனி ,பென்டம் ,சடை ( தலை தான் முதல் )
திலீபன் = தீப்பெட்டி
ரவி = ரொட்டி, பணிஸ், வி.சி.டி கட்டர்
கமல் = கொட்டகென தலைவர், கேம்
உமை = எருமைதயிர்
G.P = முக்கால் குண்டன், சைக்கிள்
ரூபன் = பத்தை , பல்லன் ( பல்லு தீட்ட மாட்டன்)
க.பிரகாஷ் = கந்தா , கார்பிக்
இ.பிரகாஷ் = ரெட்
உமா = வெட்டி , வாள்
சுகிந்து = கிஷ்கிந்தா
டினொஜன் = காம்பிரா ( இவர் 2004 தான் , ஆனா 03 உடன் தான் ஓட்டி இருபார்)
ராசா = ஆனந்தன் ( இவர் தனாகவே வைத்து கொன்ட பெயர்)
இந்திரகுமார் = முத்து
ராஜிவ் = முட்டு
மாரன் = மட்டை
சிரீ சன்கர் = தோசை
விஜித் = சு.ப, சொதி
பாலன் = கேப்பை, பெரும் குடி மகன்
சுகந்தன் = குப்பு சாமி
வாகீசன் = வாழைப்பழம்
மயுரன் = தக்காளி
பிரசாத் = லொபி
ராஜராஜன் = ராபி
எழுதியது
கனி
at
10
பின்னூட்டங்கள்
வகை: கடி
பள்ளிபருவ சின்ன காதல்கள்
வனக்கம் எனது அருமை நண்பர்கள் !
என்னடா எவனும் எதோ சொல்ல வந்துடான் என்னு ஜோசிக்காதின்க.... என் என்டால் இதுல எல்லா பெடியன்கலும் எதோ எல்லாம் சொல்ல வெளிகிடுறாங்கள். அதால நாம கொஞ்சம் முன்னுக்கு எதாவது சொல்லுவம் என்டு வெளிகிடுரன்.எதுல நம்ம பொடியன்கலின் பள்ளிபருவ சின்ன காதல்களை பற்றி சொல்லுவம் என்னு நினைகிரேன்.
தலை இருக்க வால் ஆட கூடாது என்பதுகாக முதலில்
நம்ம தலைவர் பகி இன் காதல் கதை உடன் அடுத்த தடவை உங்களை சந்திக்கின்ரென்.அதுக்கு பிறகு நம்ம G.P,திலீபன் (இவருக்கு கனக்க காதல் கதைகள் இருக்கு ), தயிர் , கமல் , சஞ்யை , ரூபன், பிரகாஷ் ( கந்தா) , பிரகாஷ் ( ரெட்) , ரொட்டி ( இவர் இப்போ புதுசா ஒரு காதல் கதை தொடங்கி இருகார் என்னு ஒரு தகவல், அதுக்கு முதலில் வால்துகள் சொல்லுரன்) எவர்கள் எல்லோரினதும் காதல் கலியாட்டங்கள் பற்றி எனக்கு தெரிந்தவற்ரை எழுதுறன். உங்களுக்கும் எதும் தெரிந்தால் எனக்கு தெரியபடுதுன்கோ
எழுதியது
கனி
at
7
பின்னூட்டங்கள்
வகை: கடி
நம்மளைப்பத்தி
2003jhc at gmail dot com












