உதவிக்கரம் வேண்டுகிறோம்

1 பின்னூட்டங்கள்:

சஞ்யே said...

நல்ல விடயம். பம்பலப்பிட்டி இந்தக்கல்லூரி மாணவர்களால் முடியமெனும் போது இந்துவின் மைந்தர்களென பெருமையாக பீற்றிக்கொள்ளும் நம்மவர்களால் ஏன் இப்பிடியொரு விடயத்தை முன்னெடுக்க முடியாது? அண்ணன் திலீபன் காலத்துக்கு முன்பிருந்தே யாழ் இந்து அன்னை நாட்டுக்காக விழங்கிக்கொண்டிருந்த பங்களிப்பு இன்றும் தொடர்கிறது எனும் உண்மை தன் மைந்தர்களை வழங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதால் வலுப்படுகிறதே அன்றி பழையமாணவர்களின் செயற்பாடுகளால் அல்ல.

செயற்படாமல் இருப்பதற்காகவே கொழும்பில் ஒரு பழையமாணவர் சங்கம் இருப்பது போல் இங்கே இலண்டனிலும் ஒன்று அல்ல இரண்டு பிரிவாக ஒன்று இருக்கிறது. பழைய கொள்ளைகளில் ஊறிப்பொன சில பழசுகள்தான் எல்லா இடங்களிலும் பதவிகளை அலங்கரிக்கின்றன.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். நாட்டில் கற்றலுக்கான சூழல் இருந்தால்தான் கல்லூரியின் கல்விச்செயற்பாடுகள் ஒழுங்காக நடக்கும். எனவே சமகாலத்தில் கல்லூரிக்கு என்ன செய்யலாம் என சிந்திப்பதை விட கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறக்கூடிய நாட்டுச்சூழலை ஏற்படுத்த நாட்டுக்கு என்ன பங்களிப்பு செய்யலாம் என சிந்திக்கின்ற, அல்லது அத்தகைய செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்ற ஓர் தலமை உலகெங்கும் உள்ள எங்கள் பழைய மாணவர் சங்கங்களுக்கு உருவாகும்வரை பழையமாணவர் சங்கங்கள் பெயரளவிலான சங்கங்களாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்னொரு விடயம்- நாமெல்லாம் எந்த பழைய மாணவர் சங்த்திலும் அங்கம் வகிக்காமல் அதன் செயற்பாடுகளை விமர்சிக்கின்ற நிலை மாறும்வரை தலமைகளை மாற்ற முடியாது.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com