புதிய நியமனம்................!!!!!!!

நமது நண்பர்கள் பார்ட்டி ஒழுங்குகளை தயார்செய்வதற்க்கான கடமைகளுக்கு பொறுப்புவகித்த நமது நண்பன் கந்தா லண்டனில் பட்ட படிப்பை தொடர்வதற்காக சென்று இருப்பதால் வெற்றிடமாகியுள்ள அந்த பதவிக்கு எந்தவித போட்டியும் சிபார்சும் இல்லாமல் தன்னிச்சையாக அந்த பதவி தனக்கே என்று பிரகடனப்படுத்தி அப்பொறுப்புகளை கவனித்து வந்த நண்பன் P.K பாலன் அவர்களின் செயல் நம்பத்தகுந்தவாறு இருப்பதனால் நமது நண்பர்கள் P.K பாலனிடம் அந்த பதவியை தொடர்ந்து செய்வதுக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர்.இதனால் நண்பர்கள் தமது பார்ட்டி சம்பந்தமான தகவல்களுக்கு P.K பாலனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம்.

இவரின் கடமைகளுக்கு உதவிக்காக உப பார்ட்டி பொறுப்பாளராக நண்பன் G.P அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனையும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியதருகின்றோம்.
இவர்களின் நியமனதுக்கு முன்னாள் பார்ட்டி ஒழுங்கமைப்பு, நெறியாள்கை பொறுப்பாளர் நண்பன் கந்தா தமது வாழ்த்துக்களையும் சில ஆலோசனைகளையும் லண்டனில் இருந்து தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நண்பன் கந்தா அவர்கள் லண்டனில் இருந்து நாடு திரும்பினாலும் அந்த பதவியில் P.K பாலனே தொடர்ந்தும் நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் P.K பாலனுக்கும் கந்தாவுக்கும் பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளில் நலன்விரும்பிகளுடன் கமலும் சு.பாவும் (விஜித்) ஈடுபட்டுள்ளார்கள்.

பி.கு: நாடு திரும்பினாலும் தான் வகித்த பதவி தனக்கு கிடைக்ககூடிய சந்தர்ப்பம் இல்லாததால் நண்பன் கந்தா லண்டனில் பார்ட்டி பொறுப்பகளை வகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கந்தாவின் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

உங்கள் Profile il

About Me: இப்போதைக்கு ஒன்னும் இல்ல........

தம்பி இதை திருத்து.. இப்போதைக்கு இல்ல எப்போதுமே ஒன்னும் இல்ல.

Anonymous said...

THis is for u KANI

பாலன்(P.K.P) said...
This comment has been removed by the author.
Anonymous said...

நன்றி

Anonymous said...

நண்பர்கள் ..............???

கனி said...

நண்பர்களுக்கு வணக்கம். இதில் பழைய மாணவன் என்ற பெயரில் எழுதப்பட்ட பின்னூட்டதுக்கு ஒரு பதில்.இப் பதிவில் எனது பெயரில் எழுதப்பட்ட பின்னூட்டம் என்னால் எழுதப்படவில்லை என்பதினை அறியதருகின்றேன். நான் எழுதப் பட்ட பதிவில் எதுவிதமான புண்படுத்தும் வசனங்கள் இல்லை.இது ஒரு நகைச்சுவைக்கு என எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்த எது எழுதப்படவில்லை. அனேகமாக நண்பர்களுக்கு எது நகைச்சுவை எது சீரியஸ் என தெரியும். இப்பதிவினை குறையாக பார்ப்பவர்கள் அல்லது பார்ப்பவன் தனது மனப்பாங்கை மாற்றி அமைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். அப்படி அவர்கள் மாறினால் அது வரவேற்கத்தக்கது. எவ்வளவு விரிவாக எடுத்துரைத்தும் இப் பதிவினை தவறாக பார்ப்பவர்கள் தாங்கள் நகைச்சுவைக்கு எழுத்தப்படும் பதிவுகளும் இனி மற்றவர்களால் தவறாக மதிப்பிடப்படும் என்பதினையும் கருத்தில் கொள்ளவும். உலகத்திலயே எதையும் எதிர்பார்க்காமல் வரும் புனிதமான உறவு தான் நட்பு. நண்பர்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வுடன் கூடிய நகைச்சுவை இருக்கவேண்டியது அவசியம், தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும் என்பார்கள்,

தயவுசெய்து இப்பதிவு உண்மையில் நகைச்சுவைக்கு என மட்டுமே எழுத்தப்பட்டது.பின்னூட்டங்கள் எழுத விரும்பும் நண்பர்கள் தங்கள் சொந்த பெயரில் எழுதினால் அவங்க முகத்திரையை ஏனைய நண்பர்களுக்கு காட்ட உதவியாக அமையும்.

பாலன்(P.K.P) said...
This comment has been removed by the author.
பாலன்(P.K.P) said...
This comment has been removed by the author.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com