இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.
போட்டி இறுதியில் 2008ற்கான இந்துவின் சிறந்த புகைப்பட பிடிப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது.அதில் 2003 பிரிவில் சி.பகீரதன் தட்டிச்சென்றார்.
இவரின் முயற்ச்சியை JHC2003.blogspot.com சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

புகைப்பட உதவி : சீனியின் நலன் விரும்பிகள்
பிற்குறிப்பு: இவரின் முயற்ச்சி யாதென்றால் சொந்த புகைப்பட கருவி இல்லாமலே விருதை தட்டிச் சென்றது.

வேலனையை பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வதிவிடமாகவும் தற்பொழுது கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் வெள்ளவத்தையை தற்காலிக வருகையிடமாகவும் கொண்ட நம்ம கஞ்சன் கமல் தனது 24 வது பிறந்தநாளினை வருகின்ற மே 31 ம் திகதி வெகுஆடம்பரமாக கொண்டாடுவார். மன்னிக்கவும் வெகு ஆடம்பரமாக கொண்டாட வைக்கப்படுவார். ஏன் எனில் இவன் ஒரு நாளும் வெகுஆடம்பரமாக சொல்லப்போனால் சும்மாவே கொண்டாடவே மாட்டான், காரணம் நண்பர்களுக்கு பார்ட்டி தரணும் என்பதுக்காக.
இதுவரையிலும் தனது பிறந்தநாளுக்கு ஒரு கப் காபிகூட வாங்கித்தராத இவர் எல்லா நண்பர்களின் பார்ட்டிக்கும் தவறாமல் அழைப்பு இல்லாட்டியும் கலந்து கொள்வார். நண்பர்களே இந்தமுறையாவது இவனிடம் இருந்து பார்ட்டி வாங்கி உலக அதிசயங்களில் ஒன்றை நிறைவேற்றுங்கள்.
நம்மளைப்பத்தி
இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com