சந்திப்பு



கடந்த ஞாயிறுக்கு முதல் ஞாயிறு அன்று கல்கிசை கடற்கரைக்கு சென்றிருந்த வேளை படமாக்கப்பட்டது.
நம்ம ரஜீவ் அடிக்கடி கார் (சொந்த கார் கிடையாது ஆரிட்டையும் ஆட்டையைப் போட்டது) கொண்டுவருவான். நாமெல்லாம் ஓசியில ஒரு சுத்து சுத்தி வருவம். எப்படியும் Dashboardக்குள்ள ஒரு பெட்டி இருக்கும். காரின் புகையுடன் அதுவும் போட்டி போடும். அப்படி கொண்டரேக்க தான் கல்கிசை பீச்சுக்கும் போனம்.

அப்புறம் நான் வெள்ளவத்தைப் பெடியங்களைப் பற்றி மட்டுந்தான் எழுதிறனாம். மற்றவங்களைப் பற்றி எழுதிறதில்லையாம். எண்டு நிறையப்பேர் குறை சொல்லுறாங்களாம். எண்டு எங்கட ஊடகப் பேச்சாளர் தோசை சொன்னார்.
உண்மையில அப்பிடியில்லை பாருங்கோ!, எனக்கு இப்ப நேரமில்லை. Semester Exam தொடங்கப்போகுது. இப்ப Study Leave விட்டிருக்கிறாங்கள். நாமெல்லாம் கடைசி நேரத்தில படிக்கிற பரம்பரைதானே? முடிஞ்சதும் எல்லாரைப் பற்றியும் விபரமா எழுதலாமெண்டிருக்கிறன்.
நம்ம ரவிசங்கரைப் (பணிஸ்/ரொட்டி) பற்றி தெரியுமோ?அவர் எங்கட Batch இல முதலாவது ஆசிரியர். அதுவும் ஆங்கில மொழிமூல கணிதபாட ஆசிரியர். சரளமாக சிங்களம் பேசக்கூடியவர். இப்பதான் College முடிச்சிருக்கிறார். யாழ் இந்துக்கல்லூரிக்கு இப்பவே ஒரு கணித ஆசிரியர் தயார். (நான் இங்க பழையமாணவன் எண்டு பெடியங்களுக்கு பந்தா காட்ட போறான்.)
மேலும் எங்கட இல தண்ணி அடிக்காத பெடியங்கள் ஆரும் இருந்தா தயவு செய்து சொல்லுங்கோ. அவங்களைப்பற்றி கட்டாயம் எழுதவேணும். எனக்குத் தெரிஞ்சு ஆரும் இல்லை. எல்லாரும் பெருங் குடிகாரங்களாகவே இருக்காங்கப்பா. இவன் பத்தை வெள்ளவத்தையில எதுவும் தண்ணிப் பாட்டியெண்டா பெராவில இருந்து உடன வெளிக்கிட்டு வந்திடுவான்.
இப்பிடி எல்லாரும் என்னதான் ஆட்டம் போட்டாலும் தங்கட தங்கட எதிர்காலத்தைப் பற்றிய குறிக்கோள்களில் உறுதியாக இருக்கிறாங்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு துறையில் நாளைக்கு பிரகாசிக்கப்போகிறார்கள். கல்லூரியின் புகழை பரப்பத்தான் போகிறார்கள்.
அப்புறம் பகீ யாழப்பாணத்தில இருக்கிற எங்கட பெடியங்களின்ர படங்களை போட்டால் நாங்களும் பாப்பமெல்லே
இறுதியாக, எல்லோரும் Address என்ன எண்டு கேட்டு வாங்கிப் பாக்கிறாங்களே அன்றி, யாரும் எழுதுவதாக தெரியவில்லை. தயவு செய்து தொடர்புகளை தொடர்ந்து பேண இந்த சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.


இவனது பந்தா தாங்க முடியலயப்பா!
பெருந்தொல்லையாக இருக்கு. ஆரெண்டாலும் ஏதாவது சொல்லுங்கோவன்.

10 பின்னூட்டங்கள்:

கனி said...

hai hai hai
This is a Main gansy group in colombo,
If anybody want to contact with them go to wellawatta market, Because these boys are working at bucher shop

சஞ்யே said...

யார் இந்த மன்மதன்?
சீனி உனக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

பகீ said...

மன்மதன் என்றது பிருதி மச்சான்.

மாயா said...

:))

படகு தரையில தானே நிக்குது பிறகேன் உந்த பந்தா ?

பகீ said...

மயூரன், அவன் இன்னும் மாேறல்ல ேபால

சஞ்யே said...

//அவன் இன்னும் மாேறல்ல ேபால//

உண்மைதான் பகீ

மாயா said...

அது சரி எழுத்தெல்லாம் ஏன் வெட்டுப்படுகுது ஊரோடியிலும் உப்பிடித்தான்

Eg //
மாேறல்ல ேபால
//

ரூபன் said...
This comment has been removed by the author.
ரூபன் said...

அம்மாம் என்ன சஞேய் 4 பேர் சேர்ந்து ஒருத்தன்ட காசில தண்... அடிக்கிறது அதுக்கு பெயர் ஒன்றுகூடலா... என்ன இது சின்னப்பிள்ளைதனமாக இருக்குது.

சினேகிதி said...

ரூபன் வலைப்பதிவில எழுதேக்க உங்கட சங்கேத பாசைகள் எல்லாருக்கும் தெரியும் என்ற நினைப்பிலயா எழுதுறீங்கள்:-)

இந்த ஆட்டையப்போடுறது சென்னைத்தமிழா இல்லாட்டா யாழ்பாணத்திலயும் அந்தச் சொல் பாவிக்கிறதா?

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com