hai friends, i am manmadhan here. actually all of u are know me as ur good and best friend.
i want to meet u all and i wish u all the best to ur great future,
Dont think i forgot tamil
because i dont have tamil font here.lol
thatsy i am using English otherwise i dont know English
Anyway Friends
C u Again
I will tell my futher Details in Future
byeeee
வெள்ளி, செப்டம்பர் 28, 2007
Welcome Friends
எழுதியது
கனி
at
6:21 PM
5
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
சந்திப்பு
அப்புறம் நான் வெள்ளவத்தைப் பெடியங்களைப் பற்றி மட்டுந்தான் எழுதிறனாம். மற்றவங்களைப் பற்றி எழுதிறதில்லையாம். எண்டு நிறையப்பேர் குறை சொல்லுறாங்களாம். எண்டு எங்கட ஊடகப் பேச்சாளர் தோசை சொன்னார்.

இவனது பந்தா தாங்க முடியலயப்பா!
பெருந்தொல்லையாக இருக்கு. ஆரெண்டாலும் ஏதாவது சொல்லுங்கோவன்.
எழுதியது
சஞ்யே
at
3:39 PM
10
பின்னூட்டங்கள்
வகை: ஒன்றுகூடல்கள்
வெள்ளி, செப்டம்பர் 21, 2007
எழுதலாம் வாங்க !
என்னடா இவனும் எழுதவந்துட்டானே எண்டு யோசிக்கிறியளோ? எல்லாரும் எழுதோணும் எண்டுதானே தொடங்கியிருக்கிறம். வெட்டிக் கதை கதைக்கிற நேரத்தை இப்படி பழைய நினைவுகளை மீட்டவும் பாவிக்கலாம் தானே.
இப்ப யாழ்ப்பாணத்தில எங்சியிருக்கிற எங்கட பெடியங்களின்ர தொகை வர வர குறைஞ்சுகொண்டே போகுது. கடைசியா G.P உம் கொழும்புக்கு வந்திட்டான். (நல்ல பெடியனா!). பழைய சரக்ககெல்லாம் விட்டுட்டு புதுசா சரக்கு மாட்டியிருக்கிறான் எண்டு கேள்வி. நம்மட பெடியங்கள் யார் யாரெல்லாம் சரக்கு மாட்டியிருக்கிறாங்கள் எண்டு பிறகு விபரமா எழுதுவம்.
இப்ப எல்லாரும் கொழும்பில என்ன பண்ணுறாங்கள், ஒவ்வொருத்தரும் எந்தெந்த துறையில குப்பை கொட்டுகிறானுகள் எண்ட விபரமெல்லாம் இங்க பதிய வேணும். அதுக்கு பிறகு ஒவ்வொருத்தனும் பள்ளிக்கூடத்தில என்னென்ன பண்ணினாங்கள் எண்டதை எழுதலாம்.
இங்க பின்னேரங்களில கொஞ்சப் போர் ஒன்று கூடுவம். நான், சு.ப.விஜித், தோசை, சுகிந்தன், நிசாந்தன்.க, பிரதாப், பிரகாஸ். ( நிறைய பிரகாஸ் இருக்கிறாங்கள், இது நாமெல்லாம் சைக்கிள் விட இடங்கொடுத்த பிரகாஸ், சோதிலிங்கம் சேர் உம் அங்க மோட்டார் சைக்கிள் விட்டவர் எண்டு கேள்வி) இப்ப G.P உம் வாறவன். உமாகாந் பெட்டையளோட பிசி தானே எப்பவாவது வருவான். மு.ரஜீவ், தயிர் இவங்களெல்லாம் அப்பப்ப வருவாங்கள்.
கடைசியாக ஜநேந்திரன்ர தண்ணிப்பாட்டியில கொஞ்சப்பேர் ஒண்டா சந்திச்சம். (சு.ப Coca Cola குடிச்சான்) ஒரு விசயம் தெரியுமோ எங்கட 2003 இல முதல்ல Degree வாங்கியது நம்ம ஜநேந்திரன் தான். இவனைப் பற்றித்தான் நான் அடுத்த பதிவில எழுதலாம் எண்டிருக்கிறன். பெருமைப்படுகிற விசயமெல்லோ?
இப்படி நம்மட பெடியன்கள் யாழப்பணத்தில இருந்து வந்து கொழும்பில ஒண்டா இருக்கிறான்கள் எண்டு பாத்தா இப்ப கொஞ்சம் கொஞ்சமா வெளிநாடு போறான்கள். இந்தப் பட்டயலிலேயும் நிறையப் பேர் இருக்கிறாங்கள். அதையெல்லாம் பிறகு எழுதுவம்.
இந்தக் கட்டத்தில்தான் பழையனவற்றை எல்லாம் புரட்டிப் பார்க்க கூடிய, சிதறிப் போயிருப்பவர்களையெல்லாம் தொடர்பாடல் முலம் ஒன்று சேர்க்கக் கூடிய, எந்தவித கட்டுப்பாடுமின்றி பிறர் மனதைப் புண்படுத்தாத வகையில் சுதந்திரமாக, ஜாலியாக எழுதக்கூடிய பதிவு ஒன்று அவசியம். எனவே காலத்தின் தேவை கருதி சிறந்த களம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று blog ஆக இருப்பது காலப்போக்கில் website ஆக உருவாக்கப்படலாம். எனவே இதன் வெற்றியும் தோல்வியும் தங்கியிருப்பது எமது கைகளில்தான். எமது ஆக்கங்களில்தான்.
எனவே இந்துவின் மைந்தர்களே கல்லூரிக் காலத்தில் எமக்கிடையே எவ்வாறு தொடர்புகள் பேணப்பட்டுவந்ததோ, அவையெல்லாம் காலப் பெரு வெளியில் காணாமல் போகாதிருக்க , சிதைந்து போகாமலிருக்க, நாம் கல்லூரித்தோழர்களாக காலம் பூராகவும் விளங்க, நமக்கிடையே ஓர் உறவுப்பாலத்தை இந்த இரண்டாயிரத்து மூன்று என்ற பதிவின் முலம் உருவாக்குவோம்.
எழுதியது
சஞ்யே
at
1:57 PM
7
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
நம்மளைப்பத்தி
ஒவ்வொருவர் வாழ்விலும் எப்போதும் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தும் காலம் பள்ளிக்காலம். ஆசிரியரிடம் அடி வாங்கியது முதல் இள மீசை அரும்பிய கால காதல் வரை எவருக்கும் மறக்காத பொற்காலம்.
அப்படிப்பட்ட அந்த பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சிதான் இந்த பதிவு. அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com
எழுதியது
பகீ
at
12:44 PM
2
பின்னூட்டங்கள்
வகை: அறிமுகம்
நம்மளைப்பத்தி
2003jhc at gmail dot com